பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2O பூர்ணசந்திரோதயம் - 5 ஆடம்பரம் எதுவுமின்றியும், அந்த விஷயம் ஜனங்களுக்கு அதிகமாக பகிரங்கமாகாமலும், அவர்கள் அந்தப் பிரேதத்தை எடுத்துப்போய் மயானத்தை அடைந்து, சாஸ்திரமுறைப்படி அதைத் தகனம் செய்து பற்பலதானதருமங்களை நிறைவேற்றிய பின் வீட்டிற்குத் திரும்பினர். ஜெமீந்தார்.இராமலிங்கம் பிள்ளை காசிக்குப் போயிருந்தவர் அவ்விடத்தில் நோய் கொண்டு படுத்திருந்து இறந்துபோய் விட்டார் என்றும், அவரது பிரேதம் அப்போதே வந்து கொளுத்தப்பட்டது என்றும் ஜனங்களுக்குள் ஒருவித வதந்தி பரவியது. நீலமேக்ம் பிள்ளை அதன் பிறகு பதினாறாம்நாள் நடத்த வேண்டிய கருமாந்திரத்தை அதிக விமரிசையாகவும் ஆடம்பரமாகவும் நடத்தி வைத்தார். இன்ஸ்பெக்டரோ அந்த மரணத்தைப் பற்றித் தமது மேலதிகாரி களுக்கு மாத்திரம் ஒருவிதமாக அறிவித்துவிட்டு அவர்களிடம் போய்த் தந்திரமாகப்பேசி, அந்த விஷயத்தை அதற்குமேல் கிளப்பாமல் அடக்கிவிடும்படி செய்தார்.

கருமாந்திரம் முடிந்து சில நாட்கள் வரையிலும் நீலமேகம் பிள்ளையின்துயரம் நீங்காமலேயே இருந்து வந்தது. அவர்தமது போஜனம் நித்திரை முதலிய கடமைகளை எல்லாம் அசட்டை செய்து தமது தந்தையின் விபரீதமான முடிவைப் பற்றி சதாகால மும் எண்ணியெண்ணி ஏக்கமும் சஞ்சலமும் அடைந்தவராய் இருந்தார்; ஆகவே, அவர் தமது தந்தையின் சட்டைப் பையிலி ருந்து எடுக்கப்பட்ட உயிலைப் பற்றிய நினைவையே மறந்து விட்டார். அதன்பிறகு ஒருநாள் தற்செயலாக அந்த உயில் அவரது திருஷ்டியில் பட்டபோதே, அவருக்கு அதைப்பற்றிய ஞாபகம் உண்டாயிற்று. தமது தந்தை அந்த உயிலில் என்னென்ன விஷயங்களைப்பற்றி எழுதியிருக்கிறாரென்று படித்துப் பார்க்கவேண்டுமென்ற ஒருவித அவா.அவரது மனதில் எழுந்தது. ஆகவே, அவர் மறைவான ஓர் இடத்தில் போய் உட்கார்ந்துகொண்டு அந்த உயிலை எடுத்துப் பிரித்துப் படிக்கலானார். அதன் முற்பாதியில் இருந்த விஷயங்களை