பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 265 மாளின் பெண்களுள் சிவபாக்கியம் என்ற ஒருத்தி நிரம்பவும் நல்ல குணம் வாய்ந்தவள். ஆகையால், அவள் இதற்கு இணங்காமல் வீட்டைவிட்டு ஓடி வந்துவிட்டாள். பிறகு அன்னத்தம்மாளின் பெண்கள் மூவரும், அவளுடைய தங்கை ஒருத்தியும் அனுப்பப்பட்டாள். சிவபாக்கியம் என்பவள் இரண்டு தினங்கள் பட்டினி கிடந்து வழியறியாமல், காடு மேடுகளில் எல்லாம் அலைந்து கருந்தட்டாங் குடிக்குப் பக்கத்திலுள்ள பாதையில் மூர்ச்சித்துக் கிடந்தாள். நான் அவளைக் கண்டு எடுத்து வந்து மூர்ச்சை தெளிவித்து அவளுடைய வரலாற்றைத் தெரிந்துகொண்டு, அந்தப் பெண்களை நல்ல வழிக்குத் திருப்ப வேண்டுமென்ற கருத்தோடு புறப்பட்டுப்போய் செஞ் சிக்கோட்டையில் அவர்களைச் சந்தித்து அவர்களோடு கோலாப்பூர் வரையில் போனேன். அந்தப் பெண்கள் என்மேல் துர் ஆசை கொண்டு, என் மனசை மயக்க எவ்வளவோ பாடுபட்டார்கள். நான் அதற் கெல்லாம் இசைந்து வராமல், அவர்களுடைய சதி ஆலோசனையை நான் அறிந்துகொண்டிருப்பதாக வெளியிட்டு அவர்கள் அப்படிப்பட்ட அக்கிரமச் சதியாலோசனையில் இருந்து விலகிக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொண்டேன். அவர்கள் அதற்கு இணங்கிவராமல் தஞ்சையிலுள்ள தங்களுடைய தாயாருக்கு எழுதி அவளுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்துகொண்டு முடிவு சொல்வதாகத் தெரிவித்து சில தினங்கள் வரையில் வாய்தா கேட்டுக் கொண்டார்கள். நான் அதற்கு இணங்கி இருந்தேன். சில தினங்களுக்குப்பிறகு அந்த ஊர் போலீசார் யாதொரு முகாந்திரமும் இன்றி என்னைப் பிடித்துச் சிறைப்படுத்தி விட்டார்கள். நான் சுமார் ஒன்றரை மாசகாலம் சிறைப்பட்டிருந்து ஒரு நண்பருடைய உதவியால் அவ்விடத்தி லிருந்து தப்பித்து நேற்றைய தினந்தான் இந்த ஊருக்கு வந்தேன். வந்து ஒர் அவசர காரியமாகத் திருவாரூருக்குப் போய் விட்டு இங்கே வந்த இடத்தில் இந்தக் கலியாணம் நடப்பதாகத்