பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 பூர்ணசந்திரோதயம் - 5 ரகசியங்களைத் தங்களிடம் தெரிவித்து அந்த மகாராணியாருக்கு அநியாயமாக ஏற்படப் போகும் பெருந்துன்பத்தை விலக்க வேண்டுமென்ற நினைவோடு நான் உடனே ஓடிவந்தேன். அவ்வளவுதான் என் வரலாறு, அதிகமொன்றுமில்லை: என்றான்.

அதைக் கேட்ட இளவரசர் மிகுந்த வியப்பும் கலக்கமும் அடைந்து, ‘என்ன ஆச்சரியம் இது! நான் நேரில் பார்த்துத் திருப்தி செய்து கொண்டு வந்திருக்கிறேன். நீர் பேசுவது வேடிக்கையாக இருக்கிறதே! அப்படி யாரையா சதியா லோசனை செய்து இங்கே இருந்து மனிதரை அனுப்பியது? அப்படி அனுப்பப்பட்ட மனிதர்கள் யார்? அந்த விஷயம் உமக்கு எப்படித் தெரிந்தது? சங்கதிகளை மூடாமல் நன்றாகத் திறந்து சொல்லுமேன்?’ என்றார்.

கலியாணசுந்தரம், “இந்த ஊரில் அம்மணிபாயி என்று ஒரு ஸ்திரீ இருக்கிறாளாம். அவளும் அம்மன் பேட்டையிலுள்ள அன்னத்தம்மாள் என்ற ஒரு கூத்தாடிச்சியும் தங்கள் பட்ட மகிஷியின் மேல் ஏதோ காரணமாகப் பகைமை கொண்டு அவர்களுக்குக் கெடுதல் செய்ய நினைத்து இப்படிப்பட்ட சதியாலோசனையை நிறைவேற்றி இருக்கிறார்கள், பூனாவி லுள்ள பட்டமகிஷியார் நான்கு தாதிமார்கள் அனுப்ப வேண்டு மென்று தங்கள் தாயாருக்குக் கடிதம் எழுதிக் கேட்டுக் கொண்டார்களாம். அவர்கள் விஷயத்தை அம்மணிபாயியிடம் தெரிவித்து, நல்லவர்களாகப் பார்த்து நான்கு தாதிகளை அழைத்து வரும்படி சொன்னார்களாம். தங்கள் பகையைத் தீர்த்துக் கொள்வதற்கு அதுவே சரியான சந்தர்ப்பமென்று நினைத்த அம்மணிபாயியும் அன்னத்தம்மாளும் யோசனை செய்து அன்னத்தம்மாளுடைய பெண்களை பூனாவுக்கு அனுப்பி, அவர்களைக் கொண்டு பட்டமகிஷியின் மேல் சந்தேகம் ஏற்படும் படியான சில காரியங்களைச் செய்ய வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டார்கள். அன்னத்தம்