பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 பூர்ணசந்திரோதயம் - 5 தெரிந்தது. எனக்குத் தெரிந்த ரகசியத்தைத் தங்களிடம் தெரிவித்துப் போக வேண்டுமென்று இங்கே வந்தேன். என்னைச் சிறைப்படுத்திய பிறகு அந்தப் பெண்கள் பூனாவுக்குப் போய் ஏதோ சூது செய்து பட்டமகிஷியாரின் மேல் பொய்யான ஒர் அவதூறை உண்டாக்கி யிருக்க வேண்டுமென்றே தோன்றுகிறது. ஆகையால், தாங்கள் அந்த விஷயத்தை ஆய்ந்தோய்ந்து விசாரித்து உண்மையை நிச்சயமாகத் தெரிந்து கொள்வது அத்யாவசியமான காரியம். அதுவரையில் இந்தக் கலியாணத்தை நிறுத்தி வைப்பதே ஒழுங்கென நினைக்கிறேன்” என்றான்.

அதைக்கேட்ட இளவரசரும், மற்ற ஜனங்களும் பெரிதும் கலக்கமும் குழப்பமும் அடைந்தனர். கலியாணசுந்தரம் கூறிய வரலாறு உண்மைபோலத் தோன்றியது. பட்டமகிஷி ஒருகால் குற்றமற்றவளாக இருப்பாளோ என்ற சந்தேகம் ஜனங்களது மனதில் உதித்தது. ஆகையால், அதற்குமேல் என்ன நடக்கும் என்பதை அறிய ஆவல் கொண்டவராய் சந்தடி செய்யாது நிசப்தமாயிருந்தனர். கலியாணசுந்தரம் தன்னைக் காட்டிக் கொடுக்காமல் தான் சம்பந்தப்பட்டிருப்பதை மறைத்து அம்மணிபாயி முதலியோரது பெயர்களை மாத்திரம் வெளியிட்டுப் பேசியதைக் கேட்ட பிறகே, பூர்ணசந்தி ரோதயத்தின் உயிர் திரும்பியது. அவளது திகில் ஒருவாறு விலக, துணிவும் உற்சாகமும் தோன்றின. ஆனாலும், முடிவு வரையில் தன் பெயர் வெளியில் வராமல் இருக்க வேண்டுமே என்ற கவலை மாத்திரம் நீங்காமல் இருந்தது. இளவரசர் தன்மீது கொண்டுள்ள அபாரமான மையலில் தன்னை வெறுத்து விலக்கவும் மாட்டார் என்றும், கலியாணத்தை நிறுத்தவும் மாட்டார் என்றும் ஒரு நிச்சயம் அப்போது அவளது மனதில் எழுந்து தைரியப்படுத்திக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில் இளவரசர் பின்புறம் திரும்பித் திரைக்கு மறைவில் இருந்த அம்மனிபாயியை அழைக்க அவள் யாதொரு பிழையும் புரியாத