பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 பூர்ணசந்திரோதயம் - 5 வேண்டுமென்ற அவசியமும் இருப்பதாக எனக்குத் தோன்ற வில்லை. நீர் எனக்கு ஏதோ அவமானம் வருமென்று பயமுறுத்தி நெல்லுக்குள் அரிசியிருக்கிறதென்ற ரகசியத்தை வெளியிடப் போகிறீர் போலிருக்கிறது. அக்கரையில்லை. விஷயம் எதுவாக இருந்தாலும் இருக்கட்டும். இவர் டமானால் நீர் அவ்விடத்திலிருந்தே சொல்லும்; இல்லையானால், மரியாதையாக வெளியில் போய்விடும். நான் மிகுதிச் சடங்கை யும் நிறைவேற்றுகிறேன். உம்முடைய ஆணை வந்து என்னை விழுங்கிவிடாது. ஆகையால் சொல்லும் சங்கதியை’ என்றார்.

அதைக் கேட்ட நீலமேகம் பிள்ளை தாம் என்ன செய்வதென்பதை அறியாமல் கலங்கித் தயங்கி நின்றார்.

இரண்டொரு விநாடிநேரம் பொறுத்துப் பார்த்த இளவரசர், ‘சரி; இந்த மனிதருக்காகக் காத்திருக்க முடியாது. நேரம் ஆகிறது ஐயா! புரோகிதரே ஆகட்டும், நாம் மேல் காரியத்தை நடத்து வோம்’ என்று கூறி மறுபடியும் பூர்ணசந்திரோதயத்தண்டை நெருங்கினார்.

இளவரசர் பிடிவாதமாக நடந்துகொண்டதையும், அவர் திருமாங்கல்ய தாரணம் செய்ய யத்தனித்ததையும், பாராக் காரர்கள் தம்மைப் பிடித்துப் பலமாக இழுத்ததையும் கண்ட நீலமேகம் பிள்ளை அதற்கு மேலும் தாம் தயங்குவது உசிதமானகாரியமல்லவென்று நினைத்து, “மகாராஜாவே நான் எவ்வளவு தூரம் கெஞ்சி மன்றாடியும் கேட்காமல், நான் ஆணையிட்டதையும் மீறி பிடிவாதமாக அந்தக் காரியத்தைச் செய்யப் போகிறீர்கள். அந்தப் பெண்ணை நீங்கள் கலியாணம் செய்துகொள்ள உங்களுக்கு முறை இல்லை. அந்தப் பெண் உங்களுடைய சொந்தப்புத்திரி; எப்படி அவள் புத்திரி என்பதை வெளியிட வேண்டுமானாலும் அதையும் சொல்லத் தடை யில்லை என்றார்.