பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/305

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 301 விட்டாள். அந்த இடத்திலிருந்து அவள் தப்பினாளோ, அல்லது, அங்கே ஏற்பட்ட நெருப்பில் அகப்பட்டு இறந்து போய் விட்டாளோ, அதுதான் தெரியவில்லை. நான் பல ஆட்களை அனுப்பிப் பார்த்தேன். அவள்திருவாரூருக்குப் போக வில்லையாம். மருங்காபுரி ஜெமீந்தாருடைய மாளிகையிலும் இல்லையாம். அந்த மனிதர்கள் தேடாத இடம் பாக்கி ஒன்று மில்லை. அம்மணிபாயி கோலாப்பூருக்குப் போய் வந்தபிறகு எல்லாச் சங்கதிகளையும் என்னிடமும் சாமளராவிட மும் சொன்னாள். ஆனால், அவள் என் தங்கையின் விஷயங்களை மாத்திரம் என்னிடம் சொல்ல மறைத்து சாமளராவும் அவளும் தனியாக இருந்த சமயத்தில் அவனிடம் சொன்னாள். நான் பக்கத்து அறையிலிருந்து அவர்கள் பேசியதை உணர்ந்தேன். என் தங்கை காணாமல் போயிருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் கலியாணம் செய்துகொள்ள என் மனம் இடந் தரவில்லை. ஆனாலும், தங்களுக்கு வாக்குக் கொடுத்து, தாங்களும் அபாரமான ஏற்பாடுகள் செய்தபிறகு நான் என் உள்விசனத்தைக் கருதிப் பின் வாங்கினால், அதன் காரணத்தை நான் வெளியிட நேருமென்று பயந்தே நான் என் மனசை அடக்கிக் கொண்டிருந்தேன். என் தங்கை காணாமல் போன விஷயம் எனக்குத் தெரியும் என்பதை நான் அவர்களிடமும் காட்டிக் கொள்ள முடியவில்லை. என் தங்கையைப் பற்றிய எந்த விவரத்தையும் நான் தங்களிடம் சொல்லக் கூடாதென்று அவர்கள் என்னிடம் கண்டித்துச் சொல்லி இருந்தார்கள். ஆகையால், நான் தேள் கொட்டிய திருடன்போல விழித்துக் கொண்டிருந்தேன். இப்போது அவள் எங்கே இருக்கிறாளோ தெரியவில்லை. தாங்கள்தான் அதற்குத் தக்க முயற்சி எடுத்துக் கொண்டு முதலில் அவளைக் கண்டுபிடிக்க வேண்டும். இப்போது சமீபத்தில் ஒர் ஆளை நான் திருவாரூருக்கு அனுப்பினேன். என் அத்தை முதலிய யாரும் அங்கே இல்லையாம். பங்களாவின் கதவு பூட்டப்பட்டிருக்கிறதாம். பங்களாவை யாரோ விற்கப் போகிறார்களாம். அதன் விவரம்