பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3 OO பூர்ணசந்திரோதயம் - 5

அந்த வரலாற்றைக்கேட்ட இளவரவர் ஆச்சரிய வசத்தராய் என்ன சொல்வதென்பதை அறியாமல் அப்படியே கலங்கி உட்கார்ந்துபோய், ‘அடடா இந்தக் கொலை பாதகர்கள் எத்தனை காரியங்கள் செய்திருக்கிறார்கள்! சாமளராவ் பரம யோக்கியன் போல் கடைசிவரையில் பட்டமகிஷிக்குப் பரிவாகவே பேசி, நான் தனத்தினிடம் நேரில் கேட்டு, இந்தக் கட்டுக்கதையை உண்மையென்று நம்பும் படி அல்லவா செய்தான். ஆகா இந்த நாய்களைச் சுண்ணாம்புக் காளவாயில் வைத்துச் சுட்டாலும், அந்தத் தண்டனை போதாதென்றே நினைக்கிறேன். என்ன அக்கிரமம் இது ஏதோ அற்ப மனஸ்தாபத்தினால் நானும் லலிதகுமாரியும் பேசாமல் இருந்து வருகிறோம். அதை வைத்துக்கொண்டு கயிறு திரித்து இவர்கள் இப்படிப்பட்ட பிரமாதமான விபரீதத்தையே உண்டாக்கி விட்டார்களே. ஒரு பாவத்தையும் அறியாத லலிதகுமாரியின் மேல் ஏற்பட்ட அபவாதம் ஊரு முழுதும் பரவிப் போய் விட்டதே. இனி இந்தக் களங்கத்தை எப்படி விலக்குவது? இந்தச் செய்தி அவளுக்கு எட்டுமானால், அவள் உடனே தன் உயிரை மாய்த்துக் கொள்வாளென்றே நினைக்கிறேன்’

என்றார்.

பூர்ணசந்திரோதயம், ‘இவர்கள் அதை மாத்திரமா செய்தார்கள்! இன்னொரு பெரியமோசமும் நடத்தியிருக்கி றார்கள். அதைத் தாங்கள் கேள்வியுற்றால், தாங்கள் அடையும் விசனத்துக்கு எல்லை இராது. அதாவது, என்னுடைய தங்கையான ஷண்முகவடிவை மஹாலகr-மியின் அவதார மென்று சொன்னாலும் அது அவளுக்குப் பொருந்தும். அப்படிப்பட்ட உத்தமியை இந்த அம்மணிபாயி தந்திரம் செய்து கோலாப்பூருக்கு வருவித்து, அவ்விடத்திலிருந்து இந்த ஊருக்கு அழைத்துவந்து, நான் இருக்கும் சோமசுந்தரம் பிள்ளையின் வீட்டில் கொண்டு போய் விடுவதாக ஏமாற்றி மருங்காபுரி ஜெமீந்தாருடைய வீட்டில் கொண்டுபோய் விட்டு வந்து