பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 299 உண்மையானால் பட்டமகிஷி எப்படி கர்ப்பிணியானாள்? : என்றான்.

பூர்ணசந்திரோதயம், ‘அன்றையதினம் தாங்கள் பூனா நகரத்துப் பூங்காவில் பார்த்தது தங்களுடைய பட்டமகிஷியாரே அல்ல. கூத்தாடி அன்னத்தம் மாளுடைய மூத்த மகளாகிய அம்மாளு நிஜமாகவே கர்ப்பிணியாக இருக்கிறாள். பட்ட மகிஷியார் அவர்களுடைய தகப்பனாரிடம் இருக்கும் சமயம் பார்த்து அதே காலத்தில் நீங்கள் தோட்டத்திற்கு வர ஏற்பாடு செய்தார்கள்; பட்டமகிஷியின் உடைகள், மூடி, ஆபரணங்கள் முதலியவற்றை அம்மாளு அணிந்து தன்னை பனாரீஸ் அங்கியால் மறைத்துக் கொண்டுவந்து குரலை மாற்றிப்பேசி விட்டுப்போனாள். அன்னத்தம்மாளின் தங்கையே மோகன ராவைப்போல ஆண்வேஷம் தரித்துவந்தது. இரண்டு பேரும், அதற்குமுன் ஏற்பாடு செய்திருந்தபடி நாடகத்தில் நடிப்பதுபோல, ஒருவரோடு ஒருவர் பேசிப் பிரிந்து போயினர். தாங்களும் சாமளராவும் மேடையின் கீழேயிருந்தது அவர்களுக்கு நன்றாகத் தெரியும்’ என்றாள்.

இளவரசர் சகிக்கவொண்ணாத பிரமையடைந்து, “ஆகாகா! மோசம்போனேனே அவர்களா வந்து அப்படி நடித்தவர்கள்: அப்படியானால், எனக்குக் கடிதங்கள் எழுதியவர்கள் யார்?” என்றார்.

பூர்ணசந்திரோதயம், “இந்த அம்மணியாயிசாமளராவ் ஆகிய இருவரும் எழுதியனுப்பியபடி அந்தப்பெண்களே ‘ஒர் ஆண்மகன்’ என்று கையெழுத்திட்ட கடிதத்தையும் எழுதிய வர்கள். சாமளராவ் எல்லாக் காரியங்களையும் நடத்தி விட்டு ஒன்றையும் அறியாதவன்போலத் தங்களோடு கூடவே யிருந்து தங்கள் பட்டமகிஷி குற்றவாளி என்று தாங்கள் நம்பும் படி செய்திருக்கிறான்’ என்றாள்.