பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 317 இருவரும் சந்தித்ததைப் பற்றியும் கரைகடந்த பேரானந்த மெய்திப் புளகிதமடைந்தவளாய் வாஞ்சையின் மேலீட்டினால் தழுதழுத்த நாவினளாய்ப் பேசத் தொடங்கி, ‘அம்மா ஷண்முகவடிவு, நான் உன்னை விட வயதில் மூத்தவளாக இருந்தாலும், பரிசுத்தமான நடத்தையிலும் மனஉறுதியிலும், நீ என்னைவிட ஆயிரம் மடங்கு சிரேஷ்டமானவள் என்பதைப் பற்றி கொஞ்சமும் சந்தேகமே இல்லை. நான் சில மோசக்காரர் களுடைய வலையில் விழுந்து ராஜஸ்திரீ ஆக வேண்டுமென்ற ஆசைப் பேய்க்கு அடிமையாய் உனக்குப் பல பொய்யான தகவல்களை எல்லாம் எழுதி உன்னையும் இளவரசரையும் வஞ்சித்தேன். எனக்கு ராஜஸ்திரீ பதவி கிடைக்க வேண்டுமென்ற கருத்தோடு எத்தனையோ கொடிய சதியாலோசனைகள் செய்யப்பட்டன. ஆனால், உன் விஷயத்திலோ, இளவரசர் தாமாகவே பிரியப்பட்டு உன்னை ராஜஸ்திரீ ஆக்குவதாகச் சொல்லி வேண்டியும், அதை நீ ஒரு திரணமாக மதித்து, உன் உயிர் போவதானாலும், அதைப்பற்றி இலட்சியம் செய்யாமல், உன் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சித்தாய். இதனால் யார் பெரியவளென்பது தெரிய வில்லையா? நான் வயசிலும் சரீர ஆகிருதியிலும் உன்னைவிட உயர்ந்தவளாய் இருந்தாலும் பரிசுத்தமான நடத்தையிலும், குணவிசேஷங்களிலும் நீயே உயர்ந்தவள்’ என்று கூறி ஷண்முகவடிவை ஒரு குழந்தைபோலக்கட்டிப்பிடித்து அத்யந்த பிரேமையோடு கன்னங்களில் முத்தமிட்டாள். ஆனால், ஷண்முகவடிவு நீலமேகம்பிள்ளையை அறியாதவள் ஆதலால், அவர் இருந்ததையும், இளவரசர் இருந்ததையும் கருதி மிகுந்த நாணமும் அச்சமும் அடைந்து வெட்கித் தலைகுனிந்து குன்றிப்போய் மெளனமாக நின்றாள். அதுபோலவே கமலம் ரகrாமிர்தம் ஜெமீந்தாரை அறியாதவளாதலால், அவளும் ஒருவிதக் கிலேசமடைந்து தனது முழு மனதையும் கூசாமல் வெளியிட வெட்கினாள். அவர்களது நிலைமையை உணர்ந்த இளவரசர், அவர்கள் இருவரையும் பக்கத்திலிருந்த இன்னொரு