பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320 பூர்ணசந்திரோதயம் - 5 அதுவரையில் தான் செய்த காரியங்களை எல்லாம் விரிவாக எடுத்துக் கூறியதன்றி, கோலாப்பூர் சிறைச்சாலையில் நடந்த சம்பவங்களெல்லாம் அம்மணி பாயியின் தூண்டுதலினால் செய்யப்பட்ட காரியங்கள் என்றும், கலியான சுந்தரத்தின் மீது எள்ளளவும் குற்றமில்லை என்றும், அவன் மகா பரிசுத்தமான நடத்தையுடைய புருவுனென்றும், அவன் சிறிது நேரத்திற்கு முன் வந்து கலியாணத்தைத் தடுக்க யத்தனித்ததையும், அப்போது அவன் தன்னைக் காட்டிக் கொடுக்காமல் பெருந்தன்மையோடு நடந்து கொண்டதையும், அதன்பிறகு நீலமேகம் பிள்ளை என்பவர் வந்து தன்னையும் இளவரசரையும் தனியாக அழைத்து உயிலைப் படிக்கச் செய்ததையும், உயிலின் விவரங்களையும் நீலலோசனி அம்மாள் முதலியோர் நீலமேகம் பிள்ளையின் மாளிகைக்கு வந்து விட்டதையும், திருவாரூர் பங்களா விற்பனைக்கு விளம்பரப் படுத்தப்பட்டிருப்பதையும் விரிவாக எடுத்துக் கூறினாள். தாங்கள் இளவரசருக்கும் இராமலிங்கபுரம் ஜெமீந்தாருடைய பத்தினிக்கும் பிறந்த பெண்கள் என்பதையும், நீலமேகம் பிள்ளை தங்களுடைய ஒன்றுவிட்ட சகோதரர் என்பதையும் கேட்ட ஷண்முகவடிவு பெரிதும் பிரமிப்பும் வியப்பும் அடைந்து அப்படியே ஸ்தம்பித்துப்போய் மெளனமாக நின்று விட்டாள். கலியான சுந்தரம் கடைசி வரையில் பரிசுத்தமாகவே நடந்து வந்திருக்கிறான். ஆதலால், அவன்தன்னை எப்படியும் மணந்து கொள்வானென்ற ஒருவித நம்பிக்கையினால் சற்றுமுன் அவளது மனம் சந்தோஷத்தினால் மலர்ந்தது. ஆனாலும், தாங்கள் ஒரு பிறப்புக் குழந்தைகள் என்பதைக் கேட்ட வுடனே, அந்த நம்பிக்கை அடியோடு மாறிப்போய்விட்டது. தங்களுடைய பிறப்பின் வரலாறு கலியாணசுந்தரத்திற்குத் தெரிந்தால், அவன் தன்னை ஏறெடுத்தும் பார்க்க மாட்டா னென்று உறுதியான எண்ணம் உண்டாயிற்று. ஆகவே, அவள் ஏக்கங்கொண்டு துயரமே வடிவாக நின்றாள். தான் மகாராஜனுடைய மகளாயிராமல், ஒர் ஏழையின் மகளாய்