பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 பூர்ணசந்திரோதயம்-5 காணப்பட்ட அந்த ஸ்திரியை சரிசமானமாக மதித்து அவளை அடிக்கவும் தண்டிக்கவும் என் மனம் இடந்தரவில்லை. ஆகையால் நான் அவளைப் பொருட்படுத்தாமல் அவ்விடத்திலேயே விட்டுவிட்டு அந்த அறையிலிருந்து வெளியில் போய், என்னுடைய தனியான விடுதியை அடைந்தேன். அதன்பிறகு நான் என் மனைவியின் முகத்தையே பார்க்கவில்லை. அவளிடம் நான் எவ்விதச் சம்பந்தமும் வைத்துக்கொள்ளவுமில்லை. அவளடைந்த பெரும் பீதியே அவளுக்குப் பெருத்த தண்டனையாகவும் கடைசியில் யமனாகவும் முடிந்தது. அந்த இரவிலிருந்தே அவளது தேகமும் மனதும் இடிந்து உட்கார்ந்துவிட்டன. அன்றைய தினம் முதல் அவள் படுத்தபடுக்கையாக வீழ்ந்துவிட்டாள். வேலைக்காரிகள் தக்க வைத்தியர்களைக் கொண்டு அவளுக்குப் பலவகைப்பட்ட சிகிச்சைகள் செய்து வந்தனரானாலும், அவளது நிலைமையில் அதுகுணமே ஏற்படவில்லை. அவள் அப்போது ஏழு மாதகாலம் கர்ப்பிணியாக இருந்தாள். ஆதலால், அதற்குப் பிறகு இரண்டு மாதகாலத்தில் அவள் நோய்ப்பட்டிருந்த நிலைமையிலேயே இன்னொரு பெண் குழந்தையைப் பெற்றாள். அதனால் ஏற்பட்ட பலஹீனமும், அவளது மனதை அறித்துத் தின்று கொண்டிருந்த மனவியாதியும் ஒன்றுகூடி அதன்பிறகு இருபது நாளைக்குள் அவளது உயிரைக் குடித்துவிட்டன. என்னைப் பார்க்கவேண்டுமென்றும், என்னோடு பேசவேண்டுமென்றும் இரண்டு மூன்று தடவைகளில் அவள் ஆள்களை அனுப்பினாள். ஆனாலும், நான் அவளது முகத்தில் விழிக்க வெட்கி, அவளிடம் போகாமலேயே இருந்துவிட்டேன். கடைசியாக அவள் எனக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்து போய்விட்டாள். அவள் உயிர்துறந்தாளென்ற செய்தியைக் கேட்ட பிறகே, நான் போய் அவளைப் பார்த்து, அவளால் எழுதப்பட்டிருந்த கடிதத்தை எடுத்துப் படித்தேன். அந்தக் கடிதம் அவளது மரண காலத்தில் கைகால்களெல்லாம் செயலற்றுப் போயிருந்த காலத்தில் எழுதப்பட்டது. ஆகையால் அது நிரம் பவும்