பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/345

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதிப்புரை

சுதேசமித்திரன் 22.12.1926-ல் எழுதுகிறது:

செளந்தர கோகிலம் (வடுவூர் ஸ்ரீமான் கே. துரைசாமி ஐயங்கார், பி.ஏ., எழுதியது.

ஸ்ரீமான் துரைசாமி ஐயங்காரை அறியாதவர்கள் தமிழ்நாட்டில் வெகு சிலரேயிருப்பார்கள். சென்ற பல வருஷங்களாக அவர் வெளியிட்டு வந்த பல நாவல்களினாலும், மாத சஞ்சிகைகளாலும் அவர் தம்முடைய பெயரைத் தமிழ் மக்கள் என்றும் மறவாமற் செய்துகொண்டுவிட்டார். கேவலம் பணத்தாசையால் மனம் போனவாறு கதைகளை எழுதி, படிப்பவர்கள் மனதைக் கெடுத்து வரும் சில ஆசிரியர்களைப் போன்றில்லாது, ஜனானுகூலத்திற்கு உடந்தையான நீதிகளை ஆங்காங்கே புகுத்தி, படிக்கப் படிக்க அலுப்புத் தோன்றாத ஜலப் பிராயமான நடையில், உலகானுபவத்திற்கு ஒத்தவிதமாகக் கதைகளை எழுதி, தமிழ் மக்களின் மனதில் உத்தமமான குணங்களையும் தூய்மையான எண்ணங்களையும் பதிய வைக்க ரீமான் துரைசாமி ஐயங்கார் முயன்று வருவதால், அவர் எழுதும் நாவல்களை ஜனங்கள் வெகு ஆவலுடன் எதிர்பார்த்திருப்பது சகஜமேயாகும். அவர் சமீபத்தில் வெளியிட்ட, ‘மாயா விநோதப் பரதேசி” என்ற மகுடமுள்ள நாவலை ஹிந்துப்பத்திரிகையில் விமரிசனம் செய்த நண்பர் ஆங்கில பிரெஞ்சு மேதாவிகள் பலர் நம்முடைய பழக்க வழக்கங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட மேனாட்டின் அனுபவங்களை ஒட்டியும், அவர்களுடைய ஆஸ்தையை பூர்த்தி செய்து வைக்கக்கூடிய விதமாகவும் எழுதியுள்ள நாவல்களின் உண்மையான உட்கருத்தை உணராமல் மனம்போனவாறும், இந்த தேசத்தின் நிலைமைக்குப் பொருந்தியது போலும் சிலர் திரித்து மொழி பெயர்ந்துள்ள நாவல்களைப் படித்து, தமிழ் நாவல்களிலேயே அடைந்திருந்த வெறுப்பை ரீமான் துரைசாமி ஐயங்காருடைய நாவல் போக்கிவிட்டதென்று சொல்லியிருப் பதில் அதிசயமொன்றுமில்லை. சுமார் 2 வருஷங்களுக்கு முன் வெளியான இந்நவீனகத்தின் முற்பாகத்தில் கண்ணபிரான் முதலியார் விவாக சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டிருந்ததைப் படித்தவர்கள் அவருடைய கதியாதாயிற்றோவென்றும, அவருடைய பெற்றோர்கள் யாரோவென்றும் அவரை விவாகம் செய்துகொள்ள இசைந்திருந்த கோகிலாம்பாள் தனது மன உறுதி தவறாதிருந்தாளோவென்றும் தெரிந்து கொள்ள வெகு ஆவ லுடனிருந்திருப்பார்கள். அவர்களுடைய ஆவலை இப்பொழுது நம் முன் இருக்கும் இரண்டாம் பாகம் பூர்த்தி செய்து வைக்கிறது.