பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 பூர்ணசந்திரோதயம் - 5 என் மனைவிக்கு ஒரு கடிதம் அந்தத் தாதி கொண்டு போய்க் கொடுத்தாளாம். கடிதத்தின் எழுத்துக்கள் என்னுடைய எழுத்துக்கள் போலவே இருந்தனவாம். அவள் இளவரசருடைய பிரியத்துக்கு அதுவரையில் இணங்கி வரவில்லை. ஆகையால், நான் அவள்மேல் கோபித்துக்கொண்டு ஊரைவிட்டுப் போய்விட்டதாகவும், அன்றைய தினம் இரவில் இளவரசர் அவளிடம் வருவாளென்றும், அவள் தடைசெய்யாமல் அவருடைய இஷ்டம் போல நடந்துகொண்டால், அந்த விஷயத்தை இளவரசர் எனக்குத் தெரிவிப்பாரென்றும், அதன் பிறகு நான் ஊருக்குத் திரும்பி வருவேனென்றும், அவள் இணங்காவிட்டால், ஊருக்குத் திரும்பிவராமல் காசி ராமேசுவரம் போய்விடுவேன் எனப் பயமுறுத்தியும், நான் எழுதியதுபோல அந்தக்கடிதம் எழுதப்பட்டிருந்ததாம். அதைப் பார்த்தவுடன் அவள் உண்மையென்றே நம்பிவிட்டாளாம். அவ்வாறு தவறான வழியில் இறங்க அவளுடைய மனம் கொஞ்சமும் இடங்கொடுக்கவில்லை. ஆனாலும், புருஷனு டைய சொல்லை மீறமாட்டாமலும், அவருடைய பிரிவாற்றா மையைச் சகிக்கமாட்டாமலும், இளவரசருடைய மோச வலைகளினால் மதிமயக்கம் அடைந்தும் அவள் ஒருவாறு தளர்ச்சி அடைந்துவிட்டாளாம். அதற்கிணங்க, அன்றைய தினம் இரவில் இளவரசர் அவளுடைய சயன அறைக்குள் வந்து, கடிதத்தில் எழுதப்பட்டிருந்த விஷயங்களுக்கு ஒத்தபடியே பேசி, அவளுடைய மனம் நம்பும்படி விஷயங்களை எடுத்துச் சொல்லி, அவளை வற்புறுத்தி பலாத்காரமாக அவளுடைய பிரியத்தைச்சம்பாதித்துக் கொண்டாராம். இந்த விஷயங்களைப் பற்றி அதன்பிறகு என்னிடம் எவ்வித பிரஸ்தாபமும் செய்ய அவளது மனம் கூசியது ஆகையால், அவள் அதைப் பற்றிய பிரஸ்தாபத்தையே என்னிடம் எடுக்கவில்லையாம்; அதன்பிறகு நான் ஊரிலிருந்து திரும்பிவந்து வழக்கப்படி அவளிடம் சந்தோஷமாக இருந்ததைக் கண்டு, தான் செய்த காரியத்தை அறிந்து அதை ஆமோதித்தே நான் அப்படி சந்தோஷமாக