பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 பூர்ணசந்திரோதயம் - 5 தொடங்கியது. லீலாவதியையும் ஷண்முகவடிவையும் பற்றிய நினைவும், தாம் அபாரமாய்ச் சேர்த்து வைத்திருந்த திரவியம் அனைத்தும் போய்விட்டதைப் பற்றியும் ஜெமீந்தார் நினைத்து நினைத்து, கட்டுக்கடங்காத துயரமும், ஏக்கமும், கவலையும் அடைந்தவராய்த்துக்கப் பெருக்கினால் வாய் திறந்து பேசவும் மாட்டாதவராய்ப் படுத்திருந்தார். ஷண்முகவடிவும் திருடனிடம் அகப்பட்டுக்கொண்டிருப்பாளோ அல்லது தப்பித்துக் கொண்டு போயிருப்பாளோ என்ற சந்தேகம் தோன்றியது. ஆனாலும் சகலமான நற் குணங்களும் வாய்ந்தவளும் மகா அற்புதமான சிருஷ்டியாக அமைந்திருப்ப வளுமான அந்த அரிய பொற் கொடி தம்மிடம் வந்து அகப்பட்டுக் கொண்டும், கடைசியில் தப்பிப்போய் விட்டாளே என்ற ஏக்கமும் ஏமாற்றமும் அவரால் சிறிதும் சகிக்க இயலாதவனவாக இருந்தன. தாம் அதுவரையில் விரயம் செய்த பொருள் போக, மிகுதியிருந்த சுமார் ஒரு கோடி ரூபாய் பெறுமான பணம் நகைகள் முதலியவை போனதை விட ஷண்முகவடிவு தமது வசப்படாமல் போனதே அவரது மனதை வாள்கொண்டு அறுப்பதுபோல வதைத்தது. அவ்வாறு போன பொருட்களைத் தவிர பூஸ்திதியாகவும், மாளிகைகளாகவும், மற்ற தட்டுமுட்டு சாமான்களாகவும் அவருக்கு இன்னமும் அளப்பரிய ஐசுவரியம் மிகுதி இருந்தன. ஆதலாலும், அவரது நிலங்களும், தோட்டங்களும் காமதேனுவைப் போலவும், கற்பக தருவைப் போலவும் அவருக்கு எப்போதும் வற்றாத வருவாயைக் கொடுத்துக்கொண்டே இருந்தன. ஆதலாலும் அவர் ஏகாங்கி ஆதலால், அவருக்கு அவசியமான செலவு அதிகமாக இல்லாமையாலும், அவர் தமது திரவியம் போனதைப் பற்றி அவ்வளவு அதிகமாக விசனப்படா விட்டாலும், அப்போதைய அவசரச் செலவுகளுக்கும், டம்பாச்சாரி விரயங்களுக்கும் தம்மிடம் தாராளமாகப் பணம் இல்லாமல் போய்விட்டதே என்ற ஒருவித வருத்தத்தை மாத்திரம் கொண்டார். ஆனால், லீலாவதியைத் திருடன்