பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 45 என்னுடைய ஆஸ்தியெல்லாம் போனதைப் பற்றிக்கூட நான் அதிகமாகக் கவலைப்படவில்லை. பெண்களிருவரையும் அந்த முரட்டுத் திருடர்கள் கொண்டுபோனதுதான் என்னால் சகிக்க முடியாத பரம சங்கடமாக இருக்கிறது. அந்த முரடர்கள் அவர்களை எங்கே கொண்டுபோயிருப்பார்களோ, எவ்விதமான கொடுமைக்கும் மானபங்கத்துக்கும் ஆளாக்குவார்களோ தெரியவில்லை. ஆகையால், நாம் எப்பாடுபட்டாவது அவர்களை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். நீங்கள் என்னுடைய உயிரைக் காப்பாற்றியதுகூட ஒரு பெரிய காரியமல்ல. அந்தப் பெண்களிரண்டு பேரையும் உங்களில் யார் கண்டுபிடித்துக் கொணர்ந்தாலும் அவனுக்குப் பதினாயிரம் ரூபாய் சன்மானம் செய்கிறேன்” என்றார்.

அதைக் கேட்ட வேலைக்காரர்கள் எல்லோரும் பதறிப்போய் அவ்விடத்தை விட்டு வெளிப்பட்டு நாலா பக்கங்களிலும் போய்த் தேட ஆரம்பித்தனர். வல்லம், காசாநாடு, உழுர், பொன்னாப்பூர் முதலிய கள்ளர் ஊர்களிலிருந்தே திருடர்கள் வந்து தஞ்சையிலும், அதற்குப் பக்கத்திலுள்ள கிராமங்களிலும் கொள்ளை மாடுபிடி முதலிய களவுகளை நடத்துவது வழக்கம் ஆதலால், சில வேலைக்காரர்கள் அந்த ஊர்களுக்கு அனுப்பப் பட்டனர். கோவிந்தசாமி ஒருவனே மாளிகையில் மிஞ்சி யிருந்தவன்; அவன் ஜெமீந்தாருக்கருகிலேயே இருந்து, அவருடைய தேவைகளையும் செளக்கியத்தையும் கவனித்துக் கொண்டிருந்தான். ஜெமீந்தார் உயர்வான மருந்துகளையும், ஊக்கத்தையும் தேக புஷ்டியையும் உண்டாக்கக் கூடிய நல்ல ஆகாரங்களையும் உட்கொண்டு ஒய்வடைந்து அன்று பகல் முழுவதும் ஸுகமாகப் படுத்துத்துங்கி பிற்பகலில் விழித்தார். உடம்பு அப்போது பச்சைப்புண்ணாக நொந்து கொண்டிருந்தது. ஆனாலும், அவர் மிகுந்த தெளிவும், பலமும், ஊக்கமும் அடைந்தவராய்ச் சாய்ந்து கொண்டிருந்தார். அவரது தேகம் தெளிவடைய அடைய, மனவேதனை அதிகரிக்கத்