பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 4 அபகரித்துக் கொண்டுபோய் விட்டான் என்பது மாத்திரம் அவரது மனதிற்கு நிச்சயமாகத் தெரிந்தது. ஆகையால், அதுபற்றி அவர் உண்மையாகவே விசனித்துக் கலங்கி உருகிக் கண்ணிர் விடுத்து அழுதார். ஏற்கெனவே எண்ணிறந்த அல்லல்களையும் சங்கடங்களையும் அனுபவித்துக் கடைசியாகத் தமது மாளிகையில் நிம்மதியாக இருக்க ஆரம்பித்த லீலாவதிக்கு அதுவரையில் நேரிட்ட துன்பங்களைக் காட்டிலும் மகா விபரீதமான அபாயம் நேர்ந்துவிட்டதே என்பதும், அந்த முரட்டுத் திருடன் அவளை எவ்விதமான துன்பத்திற்கும் மானபங்கத்திற்கும் ஆளாக்குவானோ என்ற பீதியும் அவரது மனதைக் கலக்கி, சகிக்க இயலாத வேதனைக் கடலில் அவரை ஆழ்த்திக் கொண்டிருந்தன. அவ்வாறு அவர் படுத் திருந்த சமயத்தில் அன்றையதினம் அஸ்தமன சமயத்தில் லீலாவதி திரும்பி வீடுவந்து சேர்ந்தாள்.

அவள் கட்டாரித்தேவனால் சிறை வைக்கப்பட்ட இடத்திலி ருந்து தப்பித்து வெளியில் வந்து குதிரை வண்டியில் ஏறிக் கொண்டு நீலமேகம் பிள்ளையின் மாளிகையை அடைந்து, அவ்விடத்திலிருந்து அவரோடு போலீஸ் இன்ஸ் பெக்ட ருடைய வீட்டிற்குப் போனாள் என்பது முன்னரே சொல்லப் பட்டதல்லவா. தாம் அன்றைய தினம் இரவு வெண்ணாற்றங் கரையிலுள்ள பங்களாவிற்குப் போய், அவ்விடத்தில் புதைக்கப்பட்டுள்ள பிரேதத்தை எடுத்துப் பரிசோதனை செய்வதென்று பேசி முடிவு செய்தபிறகு அவர்கள் லீலாவதியை அவளது மாளிகைக்கு அனுப்பி வைத்தார்கள். அவ்விடத்தி லிருந்து அவள் தனது மாளிகைக்குத் திரும்பிவந்தபோது, பொழுது சாயும் வேளையாகி விட்டது. அவள் மாளிகையை அடைந்தவுடனே தனது பெரிய தகப்பனாரினது rேமத்தைப் பற்றியே முதலில் விசாரித்தாள். அவர் முதல் நாளிரவு முழுதும் நாற்காலியிலேயே இருந்து மறுநாள் பகலில்தான் அப்புறப்படுத்தப் பட்டார் என்றும், இப்போது அவர் திடமாக பூ.ச.V-4