பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 பூர்ணசந்திரோதயம் - 5

வென்றும் சொல்லி நிரம்பவும் புகழுவது மூடத்தனமே அன்றி வேறல்ல. உன்னுடைய சிருஷ்டியில் துக்கம் அனுபவியாத மனிதப் பிறவியே இல்லையே பிறந்தது முதல் இறப்பது வரையில் துன்பமே கலவாத இன்பம் அனுபவிக்கும் மனிதர் யாராவது ஒருவர் உண்டா? நீ உலகத்தில் எவ்வளவு அபாரமான செல்வங்களையும் அழகான வஸ்துக்களையும் இன்பந் தரக்கூடிய பொருள்களையும் படைத்திருக்கிறாய். சிலருக்கு அபாரமான ஐசுவரியத்தைக் கொடுக்கிறாய். சிலருக்கு அழகான புருஷனையோ, அல்லது பெண்ஜாதிகளையோ அளிக்கிறாய். சிலருக்குப் புத்திர சந்தானத்தைத் தருகிறாய். சிலரை மாடமாளிகையில் சப்பிரமஞ்சத்தின் மேலே வைக்கிறாய். வேறு சிலர் சதாகாலமும் இனிமையான வஸ்துக்களையே அனுபவிக்கும் படி செய்கிறாய். அப்படிஇருந்தும், ஒரு விஷயத்தில் சுகப்பட்டால், இன்னொரு விஷயத்தில் கஷ்டம் அனுபவியாத மனிதன் இந்த உலகத்தில் இருக்கிறானா? இப்படிப்பட்ட செல்வமும் செல்வமாகுமா? சுகமும் சுகமாகுமா? உன்னுடைய சிருஷ்டியும் ஒரு சிருஷ்டியா? இதில் ஏதாவது ஒழுங்கு இருக்கிறதா? ஒரு நிர்ணயம் இருக்கிறதா? ஒரு நீதி இருக்கிறதா? நல்ல மனிதன் கெட்டமனிதன் என்கிற தாட்சணியம் இருக்கிறதா? ஒன்றுமில்லை. துஷ் டனும் ஒன்றுதான், சிஷ்டனும் ஒன்றுதான்; பாவியும் ஒன்றுதான் பரிசுத்தனும் ஒன்றுதான். எல்லோரும் ஏதோ ஒருவிதமான துன்பத்தையும் துயரத்தையும் அனுபவிக்க வேண்டியது அவர்களுடைய தலை விதியாக முடிகிறது. எதற்காக நீ மனிதரை இப்படிப் படைத்து ஒவ்வொருவரும் வேதனையடையும்படி செய்கிறாயோ என்னவோ தெரியவில்லை. முந்தி ஜென்மத்தில் அவரவர்கள் செய்யும் பாவபுண்ணியங்களுக்குத் தகுந்தபடி ஒவ்வொருவரும் கஷ்ட சுகங்களை அனுபவிக்கிறார்களென்று சொல்வதும் மூடத்தனமே அன்றி வேறல்ல. ஒரு தண்டனையை அனுபவிக்கும் ஒருவன், தான் இன்ன குற்றம் செய்ததற்காக அந்தத் தண்டனையை அனுபவிக்கிறோம் என்பதை அறிந்து