பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் - 63 மாட்டேன். ஆகையால், நீ வீணாக என்னோடு வாக்குவாதம் செய்து பொழுதைப் போக்குவதால், உனக்கு எவ்வித லாபம் ஏற்படப் போகிறது? நீ நேற்றையதினம் வாக்குக் கொடுத்தபடி இப்போது நடந்துகொள்வதைத் தவிர, வேறு எதையும் நீ செய்ய நான் இணங்கமாட்டேன். பதில் பேசாமல் வா இப்படி’ என்றான். -

முற்றிலும் குழம்பிக் கலவரமடைந்த லீலாவதி மறுபடியும் கெஞ்சத் தொடங்கி, ‘ஐயா! வேண்டாம் வேண்டாம். இது அடாது. நான் ஒரு மனிதருடைய சம்சாரமல்லவா? என் புருஷர் சிறைச்சாலைக்குப் போய் விட்டார் என்று நினைத்து, நான் துன்மார்க்கத்தில் இறங்கலாமா? நீர் அவருடைய ஆப்த சிநேகிதர் அல்லவா? என்னிடத்தில் வேறே யாராவது ஒருவன் இப்படித்தவறாக நடந்து கொண்டால்கூட, அவனைத்தண்டித்து என்னைக் காப்பாற்ற நீர் கடமைப்பட்டிருக்க, அதைவிட்டு வேலியே பயிரை அழிப்பதுபோல இப்படிப்பட்ட பாவச் செய்கையில் இறங்கலாமா? வேண்டாம். பெரிய மனசு பண்ணும். நீர் முதலில் கொஞ்சநேரம் அப்பால் போம். நான் என்னுடைய ஆடையை அணிந்துகொள்ளுகிறேன். ஆடை யில்லாத இந்த நிலைமையில் உம்மோடு பேசும்போதே என் பிராணன் போவது போலிருக்கிறது’ என்றாள்.

கட்டாரித்தேவன், ‘லீலாவதி நான் உன்னை நன்றாக அறிவேன். யாரிடம் நீ இந்தப் பாசாங்கெல்லாம் செய்து பதிவிரதைத் தனம் கொண்டாடுகிறாய்! நீ உன் புருஷனிடம் எவ்வளவு தூரம் உண்மையாகவும் ஒழுங்காகவும் நடந்து கொண்டவளென்பது எனக்குத் தெரியும். வெந்நீர் அண்டாவை நான்மறந்துவிட்டேனென்று நினைத்துக்கொண்டாயா? ஆனால் அவர் ஜெமீந்தார், அழகான மனிதர், பணக்காரர், உன்மனசுக்குப் பிடித்தவர். அவரிடம் நீ சம்பந்தம் வைத்துக்கொண்டால், அதனால் உன் பதிவிரதைத்தனம் கெடாது போலிருக்கிறது. நான் உன் மனசுக்குப் பிடிக்காத மனிதன். ஆகையால், என்னிடம் நீ பூ.ச.V-5