பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 பூர்ணசந்திரோதயம் - 5 சம்பந்தம் வைத்துக்கொள்வது உன் கற்புக்குக் களங்கம்போல் இருக்கிறது. நீ சொல்லும் ஒழுங்கு நன்றாக இருக்கிறது. பதிவிரதைத் தனமென்பது, புருஷன் ஒருவனிடத்திலேயே உண்மையான பிரியத்தோடு நடந்துகொண்டு மற்ற எப்படிப்பட்ட மனிதனுக்கும் இடங்கொடுக்காமல் இருக்கிறது என்று ஜனங்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன். நீ சொல்வதைப் பார்த்தால், பெண்கள் தங்கள் மனசுக்குப் பிடித்த மனிதன்மேல் ஆசைப்படுவது பதிவிரதைத் தனமென்றும், தங்களுக்கும் பிரியமில்லாத மனிதனிடம் சேர்க்கை வைத்துக் கொள்வது பாவமென்றும் சொல்வதுபோல இருக்கிறது. உன் மனசுக்குப் பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ அது ஒரு பொருட்டல்ல, எப்போது ஒரு மனிதனால் உன் தேகம் களங்கப்பட்டு, உன் கற்பும் அழிந்து போனதோ, அதன்பிறகு, நீ பதிவிரதைத்தனம் கொண்டாட உனக்கு யோக்கியதையே இல்லை. ஆகையால், உன்னை நான் இனி கெடுத்தாலும், அது பாவமாகமாட்டாது. அதனால் உன்னுடைய கெட்டுப் போன கற்பு இன்னமும் அதிகமாகக் கெட்டுப் போகப் போகிற தில்லை. நல்ல உடம்பில் ஒரு திவலை விஷம் கலந்தாலும், அல்லது, ஒரு பிடி விஷம் கலந்தாலும், இரண்டும் ஒன்றுதான்; கொஞ்சமும் பேதமில்லை. ஆகையால், நீ அந்த விஷயத்தில் என்னிடம் நியாயம் பேசுவதில் உபயோகமே இல்லை. அதைக் கேட்டு நான் உன்னை விட்டுப் போய் விடுவேன் என்றாவது, நான் உன் விஷயத்தில் இரக்கங் கொள்வேன் என்றாவது நீ நினைக்கவே வேண்டாம். ஏன் அநாவசியமாகக் காலதாமதம் செய்கிறாய்? நேற்று முதல் உன் விஷயத்தில் என் மனசில் உண்டாகியிருக்கும் காமத்தி என் உடம்பைத் தகித்து என் மனசைக் கருக்குகிறது; உன்னால் ஏற்பட்ட நரகவேதனை என்னை உயிரோடு கொன்றுகொண்டிருக்கிறது. இப்போது நீ தாமசப்படுத்தும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு எமனாக என்னை வதைக்கிறது. ஆகையால், நீயே மரியாதையாக என்னிடம் வருகிறாயா? அல்லது நானே அங்கே வந்து உன்னைப் பிடித்துக் கொள்ளலாமா?’ என்றான்.