பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 பூர்ணசந்திரோதயம்-5 ஜெமீந்தார், ‘நானும் அவளும் இதுவரையில் அதிகமாய்ப் பேச சந்தர்ப்பம் வாய்க்கவில்லை. ஆகையால், அவள் எல்லா விஷயங்களையும் என்னிடம் வெளியிடவில்லை. உனக்கு என்னென்ன காரியங்கள் என்னால் ஆகவேண்டும் என்பதை நீயே சொல்லிவிடு. அதை நான் உடனே முடித்துத் தருகிறேன். நீ யோசிக்காமல் வெளியிடலாம்’ என்றார். -

ஜெமீந்தார், ‘ஐயா என்பேரில் பல வாரண்டுகள் பிறந்திருக்கின்றன. போலீசார் என்னைப் பிடிப்பதற்காக பற்பல இடங்களில் கண்ணி வைத்து பகீரதப் பிரயத்தனம் செய்து கொண்டிருக்கிறார்கள். என்றைக்காவது ஒருநாள் அவர்கள் என்னை எப்படியும் பிடித்துக்கொள்வது நிச்சயம். ஆகையால், நீ இளவரசரிடம் சிபாரிசு செய்து போலீசார் இனி என்னைத் தொடராமல் இருக்கும் படி செய்ய வேண்டும். அவர் பிறப்பிக்கும் உத்தரவில் ஒரு பிரதி எனக்கு ஆதரவாக என்னிடத்திலும் இருக்க வேண்டும்; இந்த விஷயத்தை நேற்றைய தினமே நான் உம்முடைய மகளிடம் கேட்டுக் கொண்டேன். அவள் அதற்குச் சரியான வாக்குறுதி செய்து கொடுக்கவில்லை. நீர் இளவரசரிடம் மன்னிப்பு வாங்கி நாளைய தினம் சாயுங்காலத்துக்குள் என்னிடம் சேர்ப்பிக்க வேண்டும்’ என்றான்.

ஜெமீந்தார் நிரம்பவும் வியப்படைந்தவர் போல நடித்து, ‘ஒகோ அப்படியா இந்தச்சங்கதியை என்மகள் இதுவரையில் என்னிடம் தெரிவிக்கவே இல்லை. அது போகட்டும். உன் பெயரென்ன? நீ எங்கே இருப்பவன்? அந்த விவரமெல்லாம் நான் இளவரசரிடம் சொல்லி, இன்னானுக்கு மன்னிப்புக் கொடுக்க வேண்டும் என்று கேட்கவேண்டுமல்லவா?” எனறாா.

கட்டாரித்தேவன், “வாஸ்தவந்தான். என் பெயர் கட்டாரித்

தேவன் என்பது. என் ஊர் காசாநாடு. என்னுடைய புகழைப் பற்றி அறியாத மனிதரே இல்லை என்றான்.