பக்கம்:பூர்ண சந்திரோதயம்-5.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் 79

அவனது அயோக் யமான சொற்களைக் கேட்டவுடனே ஜெமீந்தாரின் மனதில் அபாரமான கோபம் பொங்கி எழுந்தது. அவரது முகம் விகாரத்தோற்றம் அடைந்தது. அவர் நிரம்பவும் மூர்க்கமாகவும் குரூரமாகவும் அவனைப் பார்த்து, “அடே அயோக்கிய நாயே! என்னுடைய காலில் மிதிப்பதற்கும் அருகமற்ற கேவலமான ஒரு புழுவுக்குச் சமானமான நீ என்னைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லுகிறாய்? உனக்கு அவ்வளவு திமிரா? உன்னிடம் முரட்டு பலம் அதிகமாக இருக்கிறதென்கிற தைரியத்தினால், நீ எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்றும், எதை வேண்டுமானாலும் சொல்லலாம் என்றும் நினைத்துக் கொண்டாயா? நேற்றைய தினம் வந்தால் உனக்குச் சம்பந்தமில்லாத விஷயத்தில் தலையிட்டு என்னைத் தூக்கி நாற்காலியில் மாட்டி, நான் நேற்றுமுதல் இன்று பகல் வரையில் அதிலிருந்து நரகவேதனை அடையும்படி செய்தாய். எத்தனையோவருஷகாலமாக நான் சேர்த்துவைத்திருந்த கோடிக் கணக்கான என்னுடைய திரவியத்தை எல்லாம் கொஞ்சமும் மனம் கூசாமல் இலேசாக எடுத்துக் கொண்டு போனாய். அதோடு ஒழியாமல், என்னுடைய மகளையும் கட்டி பலவந்த மாகத் தூக்கிக்கொண்டு போய், அவளிடம் தகாத சொற்களை எல்லாம் உபயோகித்து அவளைத் துராகிருதம் செய்ய எத்தனித்தாய். அவள் ஏதோ தெய்வச்செயலால் தப்பித்துக் கொண்டு வந்தால், நீ மறுபடியும் திரும்பி வந்து, அவளை ஏதோ உபத்திரவித்திருப்பதாகத் தெரிகிறது. இப்போது நீ கொஞ்சமும் அச்சமில்லாமல் என்னிடத்திலேயே இப்படிப் பட்ட துணிச்ச லான பிரஸ்தாபத்தைச் செய்கிறாயா? அடே! துஷ்டப் பதரே! உன் யோக்கியதை என்ன! நீ பேசும் வார்த்தை என்ன இதோடு ஒழிந்து போ நாயே!” என்று ஆத்திரத்தோடு கூறியவண்ணம் தமது இடையில் சொருகப்பட்டிருந்த கைத்துப்பாக்கிகள் இரண்டையும் சடக்கென்று வெளியில் இழுத்து வலக்கரத்தில் ஒன்றையும் இடக்கரத்தில் ஒன்றையும் பிடித்துக்கொண்டு கட்டாரித்தேவனுடைய மார்பிற்கு இலக்குப் பூ.ச.V-5