பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2. பெண்களின் போராட்டம்


உலகம் புகழும் பழம்பெரு கிரேக்க நாட்டின் ஒலிம்பிக் விளையாட்டுக்களில், கிரேக்க நாட்டு ஆண்கள் மட்டுமே பங்கு பெறலாம் என்ற ஒரு முக்கியமான விதி இருந்தது. அதைவிட கொடுமையான விதி ஒன்று. பெண்கள் பந்தயங்களில் கலந்து கொள்ளக் கூடாது என்றிருந்தால் மட்டும் பரவாயில்லை. ஆனால், பந்தயங்களை பார்க்கவே கூடாது. மீறி பார்ப்பவர்கள், பார்க்க முயல்பவர்கள் மரண தண்டனைக்குள்ளாவார்கள்.

பந்தயங்ளை பார்த்துவிட்டுப் பரிதாபமாக மலை உச்சியிலே இருந்து தூக்கியெறியப்பட்டு உயிர் நீத்தத் தியாகப் பெண்மணிகளும் இருக்கத் தான் இருந்தனர்.

1982ம் ஆண்டு காலத்தில், பெண்கள் வெளியேவந்து விளையாடக்கூடாது.அவர்கள் ஆடுவதை ஆண்களோ பார்க்கக்கூடாது. அவர்களைக் படம் எடுக்க புகைப்படக்காரர்கள்கூட போக கூடாது' என்ற கொடுமையான-கடுமையான சட்டம்