பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



9. சீட்டாட்டம் நம் கையில்!


சாதாரணமாகவே, சீட்டாட்டம் என்றால், பல சீட்டுக்களை வைத்துக் கொண்டு, காலத்தை வீணாக்கிக் கொண்டு ஆடிப் பொழுதைப் போக்குகிற ஆட்டமென்று தான் நாம் நினைக்கிறோம். நமது நினைவுக்கும் மேலாக, சீட்டாட்டத்தின் பெருமை எத்தனை அளவு பெரியதாக இருக்கிறதென்று, இன்னும் ஆழ்ந்து ஆராயும் பொழுதுதான் புரிகிறது.

ஆடுகின்ற ஆட்டக்காரர்கள் சீட்டாட்டத்தை வெறுமனே ஆடி விட்டு மட்டும் போய் விடவில்லை. ஆடி முடித்த பிறகும் அதன் நினைவுடன் ஐக்கியமாகிப் போய் விட்டிருக்கின்றார்கள். அதன் காரணமாக, ஆட்டத்தினை எவ்வாறு வளர்க்க வேண்டும் என்றெல்லாம் சிந்தித்திருக்கின்றார்கள்.

ஒவ்வொருவரின் ஒப்பற்றச் சிந்தனையின் விளைவாக, சீட்டாட்டத்தின் விதிகளில் மெருகேறின. அத்துடன் அல்லாமல் ஆட்டத்தில்