பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

39

பெண்களும் கொழுப்பும்

பெண்கள் உடலில் உள்ள மினு மினுப்புக்கும் கவர்ச்சிக்கும் அவர்களின் உடலில் இயற்கையாகவே இருக்கும் கொழுப்புச் சத்தும் ஒரு காரணம் என்பார்கள் ஏனெனில், ஆண்களைவிட பெண்களுக்கு 10%கொழுப்புத் திசுக்கள் அதிகம் உள்ளது என்கிறார்கள்.

இந்தக் கொழுப்புச் சக்தி Fat)யானது, உடலின் பல்வேறு பகுதிகளில் படிப்படியாக, இறுக்கமாக, மடிப்பு மடிப்பாகப் படிந்து பரவியுள்ளது. அது உடலின் மென்மையைக் காப்பாற்றவும், மினு மினுப்பை ஊட்டவும் கூடிய தனித்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. இதனால் என்ன பயன் என்றால், பெண்களால் அதிகமான வெப்பத்தையும், அதிகமான குளிரையும் தாங்கிக் கொள்ளவும் சமாளித்து செயலாற்றவும் கூடிய வல்லமை கிடைக்கிறது.

வான வெளியில் முதன் முதலாக மனிதரை அனுப்பிச் சோதனை நிகழ்த்த முற்பட்டபோது, ஒரு பெண்மணியைத் தான் அனுப்பினார்கள். என்பதை நாம் இங்கே பெருமையாகக்கூட நினைவு கூறலாம்.

ஆனால், இந்த கொழுப்புத் திசுக்களால் என்ன குறைவு வருகிறது என்றால், சுவாசித்து அதிகமாக உயிர்க் காற்றை உள்ளிழுத்து உயிர்ச் சிதை வளர்ச்