பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

38


அழகாக இருக்கின்றார்கள். அவர்கள் நிற்கும். போதும், நடக்கும் போதும்,ஏதாவது ஒரு செயல்கள் செய்யும் போதும் இயல்பாக எழிலாகத்தோற்றமளிக்கின்றார்கள்! சதைக் குன்றாக இருப்பவர்கள் நடைஉடை பாவனை எல்லாமே கேலிக்குரியதுதான்.

பெண்களின் தசைப்பகுதி — ஆண்களின் தசைகள் போல் அவ்வளவு வலிமையும் ஆற்றலும் உடையவை அல்ல. அதாவது ஆண்களுக்குரிய வலிமையில் பெண்களுக்கு உள்ள தசை வலிமை 65 சதவீதம் முதல் 75 சதவீதம் தான்அமைந்திருக்கிறது.

மொத்தத் தசை வலிமையில் ஆண்களுக்கு 43 சதவிகிதம் ஆற்றல் கிடைக்கிறது என்றால், பெண்களுக்கு 36 சதவிகிதம்தான் கிடைக்கிறது.

கைகளில் உள்ள தசைகளிலிருந்து பெண்கள் பெறும் வலிமையின் சதவிகிதம் 65% என்கிறார்கள். ஆண்கள் தங்கள் கால்களின் தசைகளில் பெறுகின்ற சக்தியை விட பெண்கள் தங்கள் கால்களின் தசைகளில் 85% அளவுதான் பெற முடிகிறது என்றும் கணக்கிட்டிருக்கின்றார்கள். அதனால்தான் பெண்களுக்கு விளையாட்டுகளில் அதிகமான ஆற்றலை வெளிப்படுத்த இயலவில்லை என்ற பேச்சு எல்லா தரத்தினரிடையேயும் எழுந்திருக்கிறது.