பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


37 எலும்பின் வலுவூறிய வளர்ச்சியும் திறம் நிறைந்த செயலுக்குத் துண்டுகோலாக அமைவனவாகும். இங்கே, தசை என்பதற்கும் சதை என்பதற்கும் அடிப்படையில் நிறைய வித்தியாசம் உள்ளதால், இந்த நேரத்தில் இங்கே இதை விளக்கமாக எழுதுவது பொருத்தமாக இருக்கும் என்பதால் எழுதுகிறோம். உடலானது செல்களால் (cell) ஆக்கப் பட்டிருக்கிறது. செல்கள் கூட்டம்தான் திசுக்கள் (Tissues) ஆகின்றன. திசுக்கள் கூட்டம் தான் தசைகள் ஆகின்றன. இதில் ஒரு செல் என்பது நீராலும் காற்றாலும் ஆன ஒன்றாகும். 90 சத விகிதம் தண்ணி நிறைந்திருந்து மீதி காற்றால் ஆனது செல். இந்த விகிதத்தில் செல்கள் திசுக்கள் இருந்தால் அது இறுகிய, சக்தியுள்ள அமைப்பாக மாறும் அப்படி இருப்பதற்குப் பெயர் தசை ஆகும். இறுகிய தன்மையில்லாமல் கொழ கொழ’ என்று இருக்கும் இந்தப் பகுதிக்கு சதை என்று பெயர். உடற்பயிற்சி செய்பவர்களுக்கு உடலில் இருப்பது தசை. உடலை இயக்காமல் உண்டு கொழுத்து வாழ்பவர்களுக்கு உள்ளதோ சதை. இதனால்தான் குண்டாக இருக்கும் ஒருவரை பார்த்து, "இதோ சதைக் குன்று போகிறது’ என்று பரிகாசிக்கின்றார்கள். ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந் தாலும் சரி, தசைத்திரட்சி உள்ளவர்களே பார்க்க