பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/38

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


88 என்றால் பெண்களின் உட்கொள்ளும் ஆற்றல் 25% அளவு தான் இருக்கிறது. காரணம் என்ன வென்றால், உயிர்க்காற்றை உள்ளே உறிஞ்சி இழுக்கும் ஆற்றல் பெற்ற சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையும், ஹீமோகுளோபின் அளவும் எண்ணிக்கையில் குறைவாக இருப்பதுதான். அது போலவே, காழுப்புச்சத்து அதிகமாக உள்ள பெண் உட்சுவாசத்தை அதிகம் பெறுவது கொஞ்சம் கஷ்டம் தானே! ஆண்களின் சுவாச ஆற்றல் அளவை விட, பெண்களின் சுவாசம் அதாவது உயிர்க் காற்றை உள்ளிழுக்கும் ஆற்றல் குறைவாகவே இருக்கிறது என்று வல்லுநர்கள் கூறுகின்றார்கள். உடலில் உள்ள செல்கள், திசுக்கள் இவற்றின் உயிர் சிதை 6.jørf&#" (Metabolic factor) 6T65r 15, -95.6%rā505t விட பெண்களுக்குக் குறைவாகவே உள்ளது. அதாவது ஆண்களுக்கு 10 சதவீதம் என்றால் பெண்களுக்கு 6 சதவீதம் என்பதாக அமைந் திருக்கிறது. ஆகவே, விளையாட்டுக்குத் தேவை யான அதிக பிராணவாயுவை பெண்களால் பெற முடிவதில்லை என்றும் கூறுகின்றார்கள். தசையும் வலிமையும் உடல் வலிமைக்கு எலும்பின் திண்மை தேவை என்றால், அதற்கேற்றாற் போல தசைகளின் வண்மையும் நிறைய வேண்டும். தசைத்திரட்சியும்,