பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

40

சிக்குரிய ஆற்றல் பெறும் திறமையை அதிகரித்துக் கொள்ள இயலாமல் செய்துவிடுவதுதான். இதனால் தான் பெண்கள் விளையாட்டில் அதிகமான சாதனைகளை செய்ய முடிவதில்லை என்றும் ஒரு காரணமாக இக் கருத்தினைக் கூறுகின்றார்கள்.

கற்றவர்களும் கூறுகின்றார்கள்!

பெண்களுக்கு விளையாட்டு எதற்கு? அவர்கள் ஏன் பங்கு பெற வேண்டும்? விளையாட வேண்டும் போட்டியிட வேண்டும் என்று யாராவது ரோட்டில் போகிற ஒரு மனிதன் கேட்டால் பொறுத்துக் கொள்ளலாம். ஆனால் கற்றுத் தேர்ந்த உலகம் சுற்றி உன்னத அனுபவங்களைப் பெற்று ஒழிந்து போய் கிடந்த பழைய ஒலிம்பிக் பந்தயங்களேப் புதுப்பித்து புதிய ஒலிம்பிக் பந்தயத்தின் தந்தை என்று புகழப்பட்ட பியரி கூபர்ட்டின் என்பவரும் கூறுகின்றார் என்றால் அது எப்படி? ஆச்சரியமாக இல்லையா?

1896ம் ஆண்டு கிரேக்க நாட்டில், ஏதென்ஸ் நகரத்தில் புதிய ஒலிம்பிக் பந்தயம் ஆரம்பிக்கப்பட்ட பொழுது, அதனை மும்முரமாக இருந்து நடத்தியகூபர்ட்டின் கூறினார்.” பெண்கள் வந்து பந்தயங்களைப் பார்க்கலாம். ஆனால் போட்டியிட அனுமதிக்கப்பட மாட்டார்கள்’ ஏனென்றால்: ஒலிம்பிக் பந்தயங்கள் பெண்கள் பங்கு கொள்ளும் பந்தயமாக உருவாக்கப்படவில்லை.”