பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

42

பந்தயங்கள் ஆரம்பிக்கப்பட்டபோது பெண்களுக்கு வாய்ப்பே கொடுக்கவில்லை. பழைய ஒலிம்பிக் பந்தயங்களில், பெண்கள் பார்வையாளர்களாகக் கூட அனுமதிக்கப்படவில்லை, மீறி, மறைந்திருந்து பார்த்தவர்கள் மரண தண்டனைக்குள்ளானார்கள்.

ஆனால், புதிய ஒலிம்பிக் பந்தயங்களில் கலந்து கொள்ள பெண்களுக்கு அனுமதியும் வாய்ப்பும் கிடைக்கவில்லையென்றாலும்,பார்வையாளர்களாக வர, யாரும் தடைவிதிக்கவில்லை. தண்டனை அளிக்கவில்லை. பெண்கள் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடாது என்று பார்த்துக் கொள்வதிலே, போட்டி அமைப்பாளர்கள் எல்லோருமே கண்ணுங் கருத்துமாக, மிகவும் எச்சரிக்கை நிறைந்த கவனத்துடன் இருந்தார்கள்.

1896, 1900 ஆகிய இரண்டு ஆண்டுகளில், இரண்டு முறை ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்றன. பெண்கள் போட்டிகளில் கலந்து கொள்ளுகிற வாய்ப்பே இல்லை, என்றாலும் இது பற்றிய பிரச்சினை நீறுபூத்த நெருப்பாக பெண்கள் நெஞ்சங்களிலே கனிந்து கொண்டே இருந்தது.

1904ம் ஆண்டு செயின்ட் லூயிஸ் நகரில் மூன்றாவது ஒலிம்பிக் பந்தயங்கள் நடைபெற்ற போது விளையாட்டுப்போட்டியில் கலந்துகொண்டு போட்டியிடுகின்ற முதல் வாய்ப்பினைப் பெண்கள் பெற்றார்கள்.