பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48

1908ம் ஆண்டு லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் பந்தயங்களில் டென்னிஸ் ஆட்டப் போட்டியையும் சேர்த்தார்கள். பெண்கள் வில் வித்தை, டென்னிஸ் என்ற இரு போட்டிகளில் மட்டுமே போட்டியிட அனுமதி பெற்றார்.

1912ம் ஆண்டு மூன்றாவது நிகழ்ச்சி அவர்களுக்கு இணைக்கப்பட்டது. ஆமாம், நீச்சல் போட்டியும் நடைபெற்றது.

1928ம் ஆண்டுதான் பெண்களுக்கு 'ஓடுகளப் போட்டி நிகழ்ச்சிகள்' அறிமுகப்படுத்தப்பட்டன. ஆம்ஸ்டர்டாம் நகரில் நடைபெற்ற இந்த ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கிடையே கடும் போட்டிகள் ஏற்பட்டன. இந்தப் போட்டிகளில் 800 மீட்டர் ஒட்டப் போட்டி நடைபெற்ற போது, கண்டு மகிழ்ந்த பொது மக்களைத் தவிர, நடத்திக் கண்காணித்த அதிகாரிகளிடையே ஒரு விதமான எண்ணம் ஏற்பட்டது! பெண்களுக்கு இப்படிப்பட்டப் போட்டிகள். தேவைதானா? அந்த நிகழ்ச்சி என்ன? ஏன் நடந்தது என்பதை இனி காண்போம்.