பக்கம்:பெண்கள் விளையாடினால் என்ன ஆகும்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

பவர்கள் ஒரு புறம். ஆணினத்திற்கு ஓர் அங்குலம் கூட பெண்ணினம் தாழ்ந்ததில்லை என்று நிரூபிக்கும் நிலைமைகள் தான் இவைகள் என்று புதுமைக் கோலம் போட்டுப் பேசுவோர் மறுபுறம்.

ஆனால் ஒன்றை மட்டும் ஒத்துக் கொள்ள அனைவரும் தயாராக இருக்கின்றனர். மேலே கூறப்பட்டுள்ள மூன்று விளையாட்டுக்களாவது, மென்மையான பெண்கள் கலந்து கொள்ளாத, ஆண்களுக்காக உள்ளவை என்பதாக இருந்து விட்டுப் போகட்டும் என்பது தான் அவர்கள் கோரிக்கை!

விளையாட்டுக்களிலே ராணி என்று போற்றிப் புகழப்படுகின்ற தனித்திறன் போட்டி நிகழ்ச்சிகளான ஒடுகளப் போட்டிகள் அனைத்திலும் பெண்கள் போட்டியிடுகின்றனர். அவர்கள் உடல்வாகிற்கு ஒத்து வராது என்று மூன்று நிகழ்ச்சிகளை மட்டும் விலக்கி வைத்திருக்கின்றனர். ஒன்று சங்கிலிக் குண்டு வீசி எறிதல் (Hammer Throw) இரண்டு கோல் ஊன்றித் தாண்டுதல் (Polevault) மூன்றாவது மும்முறைத் தாண்டல் (Hop step and Jump) என்பனவாகும்.

சங்கிலியில் கோர்த்த இரும்புக் குண்டினை இடுப்பை வளைத்து, சுழற்றுவதற்கு வலிமை மிகு இடுப்புத் தேவையென்பதால், பெண்கள் உடல்


பெண்_5