பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

107

மாற்றுச் சமயத்தைச் சேர்ந்த ஒரு சிறு குழுவினர் பெருமானாரைச் சந்தித்து இஸ்லாம் மார்க்கம் சம்பந்தமான பல ஐயப்பாடுகளைப் போக்கிக் கொள்ள அண்ணலாரை அணுகினர். விவாதம் நீண்ட நேரம் நீடித்தது. இரவு வெகு நேரமாகி விட்ட நிலையில், வந்துள்ளவர்கட்கு ஒவ்வொரு முஸ்லிமும் ஒரு விருந்தினரைத் தம் வீட்டுக்கு அழைத்துச் சென்று விருந்தளிக்குமாறு பெருமானார் ஏற்பாடு செய்தார்.

அக் குழுவில் வந்தவர்களில் கெடுமதி படைத்த துஷ்டன் ஒருவனும் இருந்தான். அவனது தோற்றத்தையும் அவன் செயற்பாடுகளையும் கண்டவர்கள் அவனை வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்தளிக்க விரும்பவில்லை. இறுதியாக எஞ்சியிருந்த அத்துஷ்ட விருந்தாளியை பெருமானார் தன் வீட்டிற்கு விருந்தளிப்பதற்காக அழைத்துச் சென்றார். தங்கள் குடும்பத்தவர்களுக்கென்று தயாரிக்கப்பட்டிருந்த உணவு வகைகளையெல்லாம் அன்போடு உண்ணத் தந்தார். பெருமானாரின் வீட்டாரும் உண்ண வேண்டுமே என்பதை எண்ணிப் பார்க்காத அத்துண்ட விருந்தாளி அனைத்தையும் உண்டு முடித்தான். அவ்வாறு உண்பதன் மூலம் விருந்தளிக்க அவ்வீட்டாரை அன்றிரவு பட்டினி போட வேண்டும் என்பது அவனது எண்ணமாக இருந்தது. விருந்துண்ட களைப்புத் தீர, உயர் தர விரிப்புகளை விரித்து உறங்கிக் காலையில் செல்லுமாறு பெருமானார் வேண்டினார். அவனும் அவ்வாறே தங்கினான். ஆனால், அளவுக்கதிகமாக உண்டதனால் செரிமானக் கோளாறு ஏற்பட, வாந்தியும் பேதியுமாக அவ்வறையை அசுத்தப்படுத்திவிட்டான். இதனால் விடியும் முன்னே எழுந்து யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் ஓடி விட்டான்.

காலையில் எழுந்த பெருமானார் அறையின் நிலையை அறிந்து, அசுத்தமாக்கப்பட்ட விரிப்புகளைத் தங்கள் கைப்படவே துவைத்துச் சுத்தம் செய்துகொண்டிருந்தார்கள். அப்போது அவ்வறையில் மறந்து வைத்துவிட்டுப்போன தன் வாளை எடுத்துச் செல்வதற்காக மீண்டும் அத்துஷ்ட