பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

106

கொண்ட பின்னர் அந் நகரின் ஆட்சியைக் கவனிக்க ஒரு ஆளுநரை நியமிக்க வேண்டிய அவசிய, அவசரத்தேவை ஏற்பட்டது. அப்போது அந்நகரைச் சேர்ந்த அத்தா இப்னு ஆசீத் என்பவரை அழைத்து, ‘உங்களுக்கு ஒரு நாள் தேவைக்குக் குறைந்தபட்சம் எவ்வளவு தேவைப்படும்’ என வினவினார். எதற்காகக் கேட்கிறார் என்பதை அறிந்து கொள்ளவியலாத ஆசீத் ‘ஒரு நாள் செலவுக்கு-தேவைக்கு ஒரு திர்ஹம் இருந்தால் போதும் என்று கூறினார். உடனே பெருமானார் ‘உங்களை மக்காவின் ஆளுநராக நியமித்துள்ளேன். உங்கள் ஒரு நாளின் குறைந்தபட்சத் தேவையான ஒரு திர்ஹமே உங்கள் சம்பளம் எனக் கூறி நியமித்தார். அரசுப் பணத்தை எந்த அளவுக்குச் சிக்கனமாக எடுத்துச் செலவழிக்க வேண்டும் என்பதற்கு வழியமைத்துச் சென்றவர் பெருமானார்.

தன்னிடம் உதவி என்று யார் எந்தச் சூழ்நிலையில் கேட்டாலும் அவ்வுதவியை மறுக்காமல் வழங்குவது அவரது மனிதநேயக் குணச்சிறப்பாகும்.

ஒரு சமயம் கப்பார் இப்னு அரத் எனும் நபித் தோழர், மார்க்க (தீன்) விஷயமாக மதினாவிலிருந்து வேற்று நாடு செல்ல நேர்ந்தது. மிக ஏழ்மை நிலையிலிருந்த அவரது மனவிைக்கும் இளம் மகனுக்கும் உணவாக அவர்களிடமிருந்த ஒரு ஆடு பால் தந்து வந்தது. கப்பார் வேற்று நாடு சென்று விட்டதால் ஆட்டுப் பாலைக் கறந்து தர ஆளில்லை. அந்த அம்மையார் அண்ணலாரை அணுகி தாங்கள் நாள்தோறும் காலையிலும் மாலையிலும் ஆட்டுப் பால் கறந்து தர வேண்டும் என வேண்ட, பெருமானாரும் உரி மையாளரான கப்பார் திரும்பி வரும்வரை நாள்தோறும் இரு வேளையும் ஆட்டுப்பால் கறந்து தந்து வந்தார்.

துஷ்ட விருந்தாளி

ஒரு சமயம் மதினா நகருக்கு வெளியிலிருந்து,