பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

150

புரிவோர் கஃபா இருக்கும் திசையை நோக்கியே தொழுவர். ஆனால், கஃபா இறையில்லத்தில் வணக்கம் புரிவோருக்கு திசை கட்டுப்பாடு ஏதுமின்றி எல்லாத் திசைகளிலும் கஃபாவைச் சுற்றி வட்டவடிவமாக நின்று தொழுகின்றனர்.

வாழ்வின் உட்பொருளை வெளிப்படுத்தும் ஹஜ்

ஹஜ் என்பது மனித வாழ்வின் சூட்சம நோக்குகளை செயல்பூர்வமாக வெளிப்படுத்தும் ஒன்றாகும். ஹஜ் பயணம் மேற்கொள்வோர் தாங்களே பாடுபட்டு நேர்மையான முறையில் தேடிய பொருளைச் செலவிட்டே ஹஜ் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

ஹஜ் கடமையை நிறைவேற்ற பயணம் மேற்கொள்வோர் எல்லாவித உலகியல் பற்றுகளையும் விட்டொழித்தவராக இறைவனையும் இறையில்லச் சிந்தனையையும் தவிர, மற்ற எதையும் நினைக்காதவராகத் தன் ஹஜ் கடமையை நிறைவேற்றுகிறார். இது அவரது மறுமையின் பயணத்தை அவருக்கு நினைவூட்டுவதாக அமைகிறது.

தனது குடும்பம், உற்றார் உறவினர், சொத்து சுகம் அனைத்தையும் துறந்தவராக கஃபா இறை இல்லம் நோக்கி ஹஜ் பயணம் செல்பவர் தனது மரணப் பயணத்தையே நினைவு கூர்பவராகிறார்.

ஹஜ் பயணம் செய்வோர் கஃபாவிலிருந்து ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் இருந்தே தனது ஆடம்பர ஆடை அணிகலன் அனைத்தையும் களைந்துவிட்டு தைக்கப்படாத சாதாரண துணியிலான இரு வெள்ளைத் துண்டுகளை மட்டுமே அணிகிறார்கள். இவ்வாறு அரசரா யினும், ஆண்டியாயினும் எல்லாரும் ஒரே மாதிரியான எஹ்ராம் எனும் தைக்கப்படாத வெள்ளுடை உடுத்தியே இறையில்லம் செல்ல வேண்டும். இதே உடைதான் இறந்த