பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

166


சான்றாக, ஒவ்வொரு முஸ்லிமும் தன் மறுமை நாளின் மீது அழுத்தமான நம்பிக்கை கொள்கிறான். இறுதித் தீர்ப்பின்போது அவரவர் செயல்களுக்கேற்ப இறைவனின் தண்டனையும் வெகுமதியும் அமையும்.

அந்த இறுதித் தீர்ப்பு நாளின்போது விசாரிக்கப்படும் ஒவ்வொரு மனிதனும் அவனது ஒவ்வொரு உறுப்பும் சாட்சியளிக்கும் என்பதைப் பற்றி, திருமறை.

“மறுமையில் மனிதனின் ஒவ்வோர் உறுப்பும் அவனுடைய உடல்தோறும் பேச ஆரம்பிக்கும். அவை இவ்வுலகில் மனிதன் செய்த ஒவ்வொரு செயலைப் பற்றியும் ஓர் அணுவும் விடாமல் அப்படியே ஒப்புவிக்கும். மனிதனுக்கு அவனுடைய உடல் உறுப்புகளே சாட்சி பகரும்.” (திருக்குர் ஆன்) எனத் தெளிவாகக் கூறுகிறது.

இதனை முழுமையாக எண்பிக்கும் அறிவியல் கண்டுபிடிப்பொன்றைக் கண்டறிந்துள்ளார் அமெரிக்க விஞ்ஞானி டாக்டர் ஆர்லன் கார்னே என்பவர். அவரது கண்டுபிடிப்புச் செய்தி 30-5-1984 அன்று வெளியான ‘டைம்ஸ் ஆஃப் இண்டியா’ இதழில் வெளிவந்துள்ளது.

“செவிப்பறை கிழிந்து விட்டாலோ, கடுமையான நோய்வாய்ப்பட்டாலோ பிறகு காதுகளால் ஒலிகளைக் கிரகிக்க முடியாது. அத்தகைய சந்தர்ப்பங்களில் விஷேசமாகத் தயாரிக்கப்பட்ட சில எலெக்ட்ரானிக் இயந்திரங்களின் துணைகொண்டு உடல் தோலையே காதுகளாகப் பயன்படுத்தலாம்” என்பது அவர் கூற்று. இந்தப் புதிய முறைக்கு அவர் ‘ஸ்கின் ஸ்பீச்’ (Skin Speech) எனப் பெயரிட்டுள்ளார்.

ஒவ்வொரு மனிதனும் பேசும் பேச்சொலியை உடலின் தோல்களே ஒலிப்பதிவு செய்து கொள்கின்றன. மின்னணுப் பொறியின் துணை கொண்டு பதிவான ஒலிகளை மீண்டும்