பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

189

நடந்தால் அல்லாஹ்வின் கடுந்தண்டனைக்கு ஆளாவது நிச்சயம் என்ற உணர்வின் அடிப்படையில் உருவான இறையச்ச உணர்வாலும் நிறைகிறது.

பின் பொழுது புலரவே தன் அன்றாடக் கடமைகளில் கவனம் செலுத்துகிறான். பல்வேறு காரியங்களில் அவன் மனம் மூழ்குகிறது. இதனால் நேரம் செல்லச் செல்ல மனத்தில் ஆதிக்கம் பெற்றிருந்த இறையுணர்வும் இறையச்ச எண்ணமும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத் தொடங்குகிறது. இவ்வுணர்வுகள் முற்றிலுமாக அவன் உள்ளத்தினின்றும் மறையும் முன்பாக அவன் மீண்டும் நண்பகல் தொழுகையை மேற்கொள்கிறான். மீண்டும் அவன் உள்ளம் இறையுணர்வாலும் இறையச்ச உணர்வாலும் நிறைகிறது. தொடர்ந்து பல்வேறு அலுவல்களில் ஈடுபடுவதன் மூலம் மீண்டும் மாலைத் தொழுகையில் இறையுணர்வும் இறையச்ச உணர்வும் புதுப்பிக்கப்படுகிறது. அதே தொடர் நிகழ்வுக்குப் பிறகு இரவு தூங்கச் செல்லுமுன் ஐந்தாவது தொழுகை நிறைவேற்றப்படுகிறது. நெஞ்சம் நிறைந்த இறையுணர்வோடும் இறையச்ச உணர்வோடும் தூங்கச் செல்கிறான். இவ்வாறு ஒவ்வொரு முஸ்லிமும் அதிகாலை கண்விழித்தது முதல் இரவு தூங்கச் செல்லும்வரை தன் நெஞ்சத்தில் இறையுணர்வையும் இறையச்சத்தையும் இடையறாமல் நிரப்பிக்கொண்டே இருப்பதால் இரவு பகல் எந்நேரமும் இறைவழியில் மட்டும் வாழக்கூடிய மனிதப் புனிதராகத் தன்னை உருமாற்றிக்கொள்ள ஐவேளைத் தொழுகையே ஆதார கருதியாக அமைந்து விடுகிறது. இதற்காக ஒவ்வொரு தொழுகைக்கும் அவன் செலவிடும் நேரம் ஐந்து முதல் பத்து நிமிடங்கள் மட்டுமே. ஆனால் கிடைக்கும் பலனோ அளவிலா இறையருள், மறுமைப் பெருவாழ்வு.

இஸ்லாத்தின் இறைவணக்க முறைகள்

மேலும் இஸ்லாத்தில் இறைவனுக்கும் மனிதனுக்கும் இடையே இடையாட்கள் யாரும் இல்லாததால் தொழுகைக்கென மசூதி சென்றேயாக வேண்டும் என்ற