பக்கம்:பெருமானாரின் பிறசமயக் கண்ணோட்டம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

196

மனித நேயமும்
சமய ஒருங்கிணைவும்

இந்து சமயமாகட்டும், கிருஸ்தவமதமாகட்டும், இஸ்லாமிய மார்க்கமாகட்டும் எதுவுமே பிற மதங்களை வெறுக்கவோ பகைக்கவோ கூறவே இல்லை. மனித நேயத்தையும் சமய ஒருங்கிணைவையுமே அவை வலியுறுத்துகின்றன.

இஸ்லாத்தைப் பொருத்தவரை, உலகிலுள்ள அனைத்துச் சமயங்களும் மரியாதைகக்குரியன எனப் போதிக்கிறது. பிற சமயத்தவர் வேதங்கள், வணக்கத் தலங்கள், அவர்கள் போற்றிப் பின்பற்றும் வேதங்கள்; அவர்கள் மேற் கொண்டொழுகும் சடங்குகள், சம்பிரதாயங்கள் ஆகிய அனைத்தையும் ஒரு முஸ்லிம் மதிக்க வேண்டும் எனப் பணிக்கிறது. அவற்றைப் பற்றித் தவறாகப் பேசுவதை அறவே தடுக்கிறது.

“அல்லாஹ்வை விடுத்து அவர்கள் எவற்றை வணங்குகிறார்களோ அவற்றைப் பற்றி நீங்கள் தீங்கு பேசாதீர்கள்” (6:-08) என்பது திருமறையாகிய திருக்குர்ஆன் வாசகமாகும்.

அவரவர் சார்ந்துள்ள மார்க்கத்தை-மதத்தை அவரவர் வழியில் பேணி, பின்பற்ற இஸ்லாம் எடுத்துக் கூறுகிறது, இதைப்பற்றி திருக்குர்ஆன்.

“உங்கள் மார்க்கம் உங்களுக்கு, எங்கள் மார்க்கம் எங்களுக்கு” என எடுத்தோதுகிறது.

“இஸ்லாம் எந்தச் சமயத்திற்கும் எதிரானது அல்ல,” என்பது நபிகள் நாயகத்தின் வாக்காகும்.

அதுமட்டுமல்ல, உலகிலுள்ள அனைத்துச் சமயங்களையும் அவற்றின் வேதங்களையும் அவற்றிற்குக் காரணமான தீர்க்கதரிசிகளையும் பெரிதும் மதிக்கப் பணிக்கிறது. அவை அனைத்தும் இறைவனால் வழங்கப்பட்டவை