பக்கம்:பொன் விலங்கு.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 159

இரகசியமாக ஆங்கிலமும் இந்தியும் கற்பித்துக் கொண்டிருக்கிறேன். பெரிய இடத்து விவகாரம் அல்லவா? அதனால் வெளியே சொல்லப்படாது. இது வெளியில் தெரியக்கூடாது என்று ஜமீன்தாரே கூச்சப்படுகிறார். இதனை வயதுக்குமேல் ஜமீன்தாருக்குப் படிப்பில் மோகமா? என்று மக்கள் பேசிக் கொள்ளத் தொடங்கிவிடுவார்களோ என்பதாக அவர் பயப்படுகிறார்" என்று அப்பா ஒரு நாள் பேச்சுவாக்கில் சிரித்துக் கொண்டே சொல்லியிருந்தார். அப்பா கண்ணாயிரத்திடம் கடன் வாங்க முயல்வதும், மஞ்சள்பட்டி ஜமீன்தாருக்கு ஆங்கிலமும் இந்தியும் கற்பிப்பதாக அலைந்து கொண்டிருப்பதும் சத்தியமூர்த்திக்குச் சிறிதுகூடப் பிடிக்கவில்லை. நான் சம்பாதித்துப் போடுவதற்குத் தயாராகாத வரையில் இதையெல்லாம் தடுப்பதற்கு எனக்கு உரிமை ஏது? என்று அடங்கியிருந்தான் அவன். ஆங்கிலச் செய்தித்தாளில் விடுமுறைக்குப் பின் மல்லிகைப் பந்தல் கல்லூரி திறக்கப் போகிற நாளைக் குறிப்பிட்டு விளம்பரம்கூட அன்று காலையில் வெளிவந்து விட்டது. ஏமாற்றமும், குழப்பமும் அவனை ஒடுங்கிப்போகச் செய்திருந்தன. பெட்டியில் இருந்த பாரதியின் கடிதத்தை அவன் இரண்டாவது முறையாக எடுத்துப் படித்தான். அந்தக் கடிதத்தைப் படிப்பதில் அவன் மனம் சிறிது ஆறுதல் அடைந்தது, 'என்னை ஏமாற்றி விடாதீர்கள் சார் உங்களை அடைந்தது. படிப்பதில் அவன் மனம் சிறிது ஆறுதல் அடைந்தது. ‘என்னை ஏமாற்றி விடாதீர்கள் சார்! உங்களை அவசியம் இங்கே எதிர்பார்க்கிறேன் என்று அந்தக் கடிதத்தை முடித்திருந்தாள் பூபதியின் மகள். அதைப் படிக்கும்போது அவன் தன் ஞாபகத்தில் முழுமையான மகிழ்ச்சியை உணர்ந்தான்.

'நான் உன் விருப்பப்படியே மல்லிகைப் பந்தலுக்கு வந்துவிட வேண்டும் என்று நினைத்தாலும் உன் தந்தை என்னை ஏமாற்றி விடுவார்போல் இருக்கிறது பெண்ணே! என்று எண்ணிக் கொண்டே மனத்துயரத்தோடு அந்தக் கடிதத்தை பெட்டியில் வைத்துப் பூட்டினான் சத்தியமூர்த்தி. இனிமேல் மல்லிகைப் பந்தலிலிருந்து கடிதமோ, ஆர்டரோ வரும் என்ற நம்பிக்கைகூட அவனுக்கு இல்லை. தன்னுடைய உருக்கமான கடிதம் கூடப் பூபதியின் மனத்தை மாற்றவில்லை என்று எண்ணியபோது அவனால் அந்த ஏமாற்றத்தைத் தாங்கிக் கொள்ளவே முடியாமல் இருந்தது. வெளியில் எங்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/161&oldid=595127" இலிருந்து மீள்விக்கப்பட்டது