பக்கம்:பொன் விலங்கு.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 பொன் விலங்கு

புண்படுத்துவானேன் என்ற எண்ணத்தோடு, "நான் அவசியம் உன் அக்காவின் நாட்டியத்தைப் பார்க்க வருகிறேன் தம்பீ?" என்று மேலும் நம்பிக்கையளிக்கிற விதத்தில் சொல்லி அந்தப் பையனை அனுப்பினான் சத்தியமூர்த்தி, வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் அப்பா அம்மா எல்லோரும் கூடத்தில்தான் இருந்தார்கள். ஆர்டரை எடுத்து அப்பாவின் கையில் கொடுத்தான் அவன். அதைக் கையில் வாங்கிக்கொண்டதும் பிரித்துப் பார்க்காமலே, என்னது? என்று அவனை நிமிர்ந்து பார்த்துக்கேட்டார் அப்பா. சத்தியமூர்த்திநிதானமாக மறுமொழி கூறினான்:

'மல்லிகைப் பந்தல் கல்லூரியிலிருந்து ஆர்டர் வந்திருக்கிறது." - - தன்னுடைய இந்தச் சொற்களைக் கேட்டு அம்மா, அப்பா, தங்கைகள் எல்லாரும் முகம் மலர்வதைக் கவனித்தான் அவன். ஆர்டரைப் பிரித்துப் படிக்கத் தொடங்கினார் அப்பா.

அம்மா அவனை நோக்கிக் கேட்டாள். 'சம்பளம் என்ன போட்டிருக்கிறார்கள்?"

அம்மாவின் இந்தக் கேள்வியைப் பொறுத்துக்கொள்ளவும் முடியாமல் கோபித்துக் கொள்ளவும் முடியாமல்,

'சம்பளத்தைப் பற்றி என்ன வந்தது இப்போது? இருநூறு ரூபாய்க்கு மேல் வருகிறாற்போல் ஏதோ போட்டிருக்கிறார்கள்' என்று பதில் கூறினான் அவன். х

'இன்று சாயங்காலம் பேச்சியம்மன் கோவிலில் நெய் விளக்குப் போட்டுவிடு கல்யாணி! நான் சத்தியத்தின் நட்சத்திரத்துக்குப் பழைய சொக்கநாதர் கோவிலில் ஓர் அர்ச்சனையும் செய்து விடுகிறேன்" என்று அம்மா கூறியபோது அந்தப் பக்தியும் பேதமை நிறைந்த தாகவே தோன்றியது சத்தியமூர்த்திக்கு. .

"ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் தேவைகளை நிறைவேற்றி யவுடன்தான் தெய்வத்துக்கு நன்றி செலுத்துவது என்று வைத்துக் கொண்டால் என்ன ஆவது? அப்படிப்பட்ட நன்றியிலேயே தெய்வமும் திருப்தியடைந்து விடுமானால் அப்புறம் சாதாரணமான சர்க்கார் அதிகாரிகளுக்கும் தெய்வத்துக்கும் என்ன வித்தியாசம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/168&oldid=595140" இலிருந்து மீள்விக்கப்பட்டது