பக்கம்:பொன் விலங்கு.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 165

ஆவலோடு எதிர்பார்க்கிறேன். உங்களுக்கு மிகவும் விருப்பமான மல்லிகைப் பந்தலின் மணம் மிகுந்த பூக்கள் இரண்டையும் இந்தக் கடிதத்தில் சொருகியிருக்கிறேன்......

உங்கள் பாரதி."

இந்தக் கடிதத்தைப் படித்ததும் இப்படிக்கூட ஓர் அன்பு உலகத்தில் உண்டா என்று ஆச்சரியம் அடைந்தான் சத்தியமூர்த்தி. உடனே பூபதிக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதமும் எழுதினான். அந்தக் கடிதத்தைத் தபாலில் சேர்த்துவிட்டு அவன் வீடு திரும்பியபோது அன்றொருநாள் மோகினியோடு கோவிலில் பார்த்த அந்தச் சிறுவன் உள்ளே செல்வதா திரும்பிப் போய் விடுவதா என்ற தயக்கத்தோடு தன் வீட்டு வாசலில் வந்து நின்று கொண்டிருப்பது தெரிந்தது.

"என்ன தம்பீ?"

"சார் அக்கா உங்களைப் பார்த்து ஒரு சங்கதி சொல்லிவிட்டு வரச் சொன்னாங்க...'

"சொல்லேன் என்ன சங்கதி அது?"

'சித்ரா பெளர்ணமியன்று மாலை ஏழு மணிக்கு தமுக்கம் பொருட்காட்சியில் மோகினி அக்காவோட நாட்டியம் இருக்கு. அதுக்கு நீங்க அவசியம் வரணுமின்னு அக்கா ஆசைப்படறாங்க! வேறே யாருக்கும் தெரியப்படாது. உடனே இதைப்போய் அவரிடம் சொல்லிவிட்டு வான்னாங்க. இந்த வீட்டைக்கூட அக்கா சொன்ன அடையாளத்திலிருந்துதான் நான் தேடிக் கண்டுபிடித்தேன்."

"சரி வருவதற்கு முயற்சி செய்கிறேன் என்று உன் மோகினி அக்காவிடம் போய்ச் சொல்."

'அப்படிச் சொல்லாதீங்க சார். கண்டிப்பா வரேன்னு சொல்லுங்க நீங்க வரேன்னு சொன்னாதான் அக்காவுக்கு நிம்மதி..." சத்தியமூர்த்தியிடமிருந்து சரியான பதில் கிடைக்கிறவரை போவதில்லை என்பதுபோல் விடாப்பிடியாகநின்று கொண்டிருந்தான் அந்தப் பையன். ஏற்கெனவே பல விதமாகப் புண்பட்டுப் போயிருக்கும் அந்த அபலையின் மனத்தைத் தானும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/167&oldid=595138" இலிருந்து மீள்விக்கப்பட்டது