பக்கம்:பொன் விலங்கு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 பொன் விலங்கு

"ஒன்றும் செய்யாமலே இருக்கலாம்? ஆனால், அதற்கு வேறு எத்தனையோ காரணங்கள் உண்டு சத்தியம்! அறியாமையும், வறுமையும்தான் இன்று இந்த நாட்டில் மனிதர்களைப் பிரிக்கவும், தரப்படுத்தவும் காரணமாக இருக்கின்றன. பழைய காலத்தில் பெண்களின் பரிசுத்தம் சோதிக்கப்படுவதற்கு அக்கினிப் பிரவேசம் இருந்ததைப் போல் வறுமை வேதனைகளாலும் அறியாமை இருளினாலும் துன்பப்படுகிற நாடு தன் பரிசுத்தத்தை நிரூபித்துக் கொள்ள உழைப்பையும் நம்பிக்கையையும் வேள்வித் தீயாய்ப் பெருக்கி அவற்றின் ஒளி வெள்ளத்தே மூழ்கி எழவேண்டும்! நேர்மையான இலட்சியத்தை முன் நிறுத்திச் செயல்படுகிற ஒவ்வோர் இயக்கமும் சமூகத்துக்கு ஓர் அக்கினிப் பிரவேசம்தான்." "ஒப்புக் கொள்கிறேன், குமரப்பன் ஆனால் மோகினியைப் போன்றவர்களின் துன்பத்துக்காக யாரும் இயக்கம் நடத்த மாட்டார்கள். அவர்கள் இப்படியே இந்தக் கவலைகளோடு வெந்து அழிய வேண்டியதுதான்; சமூகத்தில் எல்லாருமே நாசூக்காகப் புறக்கணித்து விடுகிற பகுதி அது."

"நிச்சயமாக இல்லை! நீ சொல்லிய விவரங்களிலிருந்து அவளைப்போல் பிடிவாதக்காரப் பெண் தன்னைக் காத்துக் கொள்வதில் தனக்குத்தானே ஓர் இயக்கமாக இருப்பாள். 'சாது முரண்பட்டால் காடு கொள்ளாது' என்று ஒரு பழமொழி உண்டு. மோகினி எவ்வளவுக்கு எவ்வளவு மென்மையாகவும் அழகாகவும் இருக்கிறாளோ, அவ்வளவுக்கவ்வளவு உறுதியாகவும் இருப்பாள். கண்ணாயிரங்களும், மஞ்சள்பட்டி ஜமீன்தார்களும் அவளுக்கு முன்னால் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டுதான் போகப் போகிறார்கள். நீ கவலைப்படுவதை விட்டுவிடு! நிம்மதியாக மல்லிகைப் பந்தல் கல்லூரியில் போய் வேலையை ஒப்புக்கொள். கல்லூரி நேரம் போக எஞ்சிய நேரத்தில் நிறையப் படி நிறையச் சிந்தனை செய். டாக்டர் ஆப் லிட்ரேச்சர், மாஸ்டர் ஆப் லிட்ரேச்சர், என்று எத்தனை பெரிய பெரிய பட்டங்கள் எல்லாம் உண்டோ அத்தனையும் வாங்கித் தீர்ப்பதற்கு இப்போதிருந்தே திட்டம் போடு. மல்லிகைப் பந்தலைப் போல் அழகிய ஊரிலிருந்து கொண்டே நாட்களை வீணாகக் கழித்து விடாதே. வாழ்க்கைத் தரம் உயர்ந்த ஊர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/180&oldid=595168" இலிருந்து மீள்விக்கப்பட்டது