பக்கம்:பொன் விலங்கு.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 பொன் விலங்கு

"நீங்கள் அன்று சித்திரைப் பொருட்காட்சியில் ஆண்டாள் நடனத்துக்குப் பின்னால் சில சில்லறை நடனங்களை ஆடினிர்களே: அவற்றை எனக்குப் பிடிக்கவில்லை. பரதநாட்டியத்துக்குத் தொடர்ச்சியாக இவற்றை ஆடும்போது பரத நாட்டியத்தின் கெளரவத்தையே இவை கெடுத்துவிடுகின்றன. நல்ல மரம் வளர்ந்தபின் அதைச் சில புல்லுருவிகளும் பற்றிப் படர்வதுபோல் ஒவ்வொரு கலையும்,தான் வளரும்போதுதன்னைச்சுற்றித்தன்கீழே இப்படிச் சில கலைகளையும் வளர விட்டு விடுகிறது. கலைகளின் தரத்தைக் காக்க விரும்புகிறவர்கள் இந்தக் கலைகளைக் களைய வேண்டும்."

'உண்மைதான் எனக்கும் அப்படிப்பட்ட சில்லறை நடனங்களைப் பிடிக்கவில்லை. எனக்கு இதைக் கற்றுக் கொடுத்த வாத்தியார் அடிக்கடி, இந்தக் கலை வெறும் தெருக் கூத்து இல்லையம்மா இது சரசுவதியோட இலட்சணம்' என்று சொல்வார். 'நீ கால்களிலே சலங்கையைக் கட்டிக்கொண்டு மேடையேறி ஆடும்போது உன்னால் ஆளப்படுகிற கலை எதுவோ அந்தக் கலையின் அழகுதான் மக்களைக் கவர வேண்டுமேயொழிய உன் உடலின் அழகுமட்டுமே மக்களைக் கவர்ந்து நீ ஆள்கிற கலையின் அழகு மக்களைக் கவர்வதற்குத் தவறிவிடக் கூடாது. அப்படித் தவறினால் அது பூப்பொட்டலத்தைச் சுற்றி வைத்திருந்த இலையைக் கூந்தலில் வைத்துக்கொண்டு பூவைத் தூர எறிவதுபோல் நோக்கம் பிறழ்ந்த கலையாகிவிடும்' என்றும் வாத்தியார் அடிக்கடி சொல்லுவார். உயர்ந்த தரத்துக் கலையைத் தெருக்கூத்தாக மாற்றிக் கேவலப்படுத்தக் கூடாது என்பதுதான் என் அபிப்ராயம். ஆனால் நான் எந்தக் கலையை ஆள்கிறேனோ அந்தக் கலையை என் விருப்பப்படி ஆளமுடியாமல் அம்மாவும் கண்ணாயிரமும் ஏதேதோ வியாபாரத் திட்டம் போடுகிறார்கள். அதுதான் சொன்னேனே, பல வகையான காரணங்களால் நான் நினைக்கிற உயரத்துக்கு மேலே ஏறிப்போய் என்னால் வாழ முடியாமலிருக்கிறது. மனத்தினால் மட்டும்தான்நான் வாழ்கிறேன்."

அவள் முகத்தையே பார்த்திருந்த சத்தியமூர்த்திக்கு அப்போது அவள் கூறியவற்றையெல்லாம் நம்பாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/200&oldid=595215" இலிருந்து மீள்விக்கப்பட்டது