பக்கம்:பொன் விலங்கு.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 - பொன் விலங்கு

முன், சத்தியமூர்த்தி எதற்காக எந்த வேலையை ஏற்றுக் கொண்டு அந்த ஊருக்கு வந்திருக்கிறான்? என்பது போன்ற சில விவரங்களை அறிந்து கொள்வதற்காக அவனிடம் விசாரித்தார் அந்த வீட்டின் சொந்தக்காரர். பூபதி கலைக் கல்லூரியின் பெயரைச் சொல்லிய மறுகணமே அந்த மனிதர் விசாரிப்பதை நிறுத்திக்கொண்டு அடங்கி விட்டதைக் கண்டு சத்தியமூர்த்தியே வியப்படைந்தான். தொழிலதிபர் பூபதியும், அவருடைய கல்லூரியும் அந்த ஊரில் எவ்வளவு கெளரவத்துக்கும், பெருமைக்கும் உரியவர்களாக இருக்கிறார்கள் என்பதை அவன் இந்த நிகழ்ச்சியிலிருந்து ஒருவாறு விளங்கிக் கொள்ள முடிந்தது. - -

'அறை ஒன்றுக்கு மாதம் நாற்பத்தெட்டு ரூபாய் வாடகை, ஒருவரே அந்த வாடகையைக் கொடுத்துக் கொண்டு தனி ஆளாக இருப்பதானாலும் ஆட்சேபணையில்லை. வாடகையைப் பகிர்ந்துகொள்ள இன்னும் யாராவது வைத்துக் கொள்ள உத்தேசம் இருந்தால் அறை எவர் பெயருக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறதோ அவரைத் தவிர இன்னும் இரண்டு பேரை மட்டும் உடன் தங்கச் செய்து கொள்ளலாம். அப்படி உடன் தங்குகிற இருவரிடமும் தலைக்குப் பதினாறு பதினாறு ரூபாய்க்கு மேல் ஒரு சல்லிக் காசுகூட வசூலிக்கக் கூடாது. அதை வசூலிக்கும் பொறுப்பும் முதலில் அறை எடுத்துக் கொள்கிறவரைச் சேர்ந்ததுதான்; வீட்டுக்காரர் அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதற்கு முடியாது. முதலில் அறை எடுத்துக் கொள்கிறவர் மாதம் பிறந்ததும் வீட்டுக்காரரிடம் ரூபாய் நாற்பத்தெட்டை எண்ணி வைத்து விடவேண்டும். குளியலறையில் தண்ணீரைச் சிக்கனமாகச் செலவழிக்க வேண்டும். இரவு பத்து மணிக்குமேல் மின்சார விளக்கை உபயோகிப்பது நல்லதில்லை. அறைச்சுவரில் அநாவசியமாக ஆணிகளை அடித்துப் பாழாக்கக் கூடாது. வீட்டுக்காரர் வசிப்பவர் இருவரில் யார்தரப்பிலிருந்து காலி செய்ய விரும்பினாலும் மூன்று மாதம் முன் தகவல் கொடுத்துவிட்டுக் காலி செய்ய வேண்டும். முதலில் அறை எடுத்துக்கொள்கிறவரோடு உடன் தங்குகிற மற்ற இருவரையும் வெளியேற்றும் உரிமை அவருக்கே உண்டு. இந்த இருவரைப் பற்றி எந்தக் கவலையையும் வீட்டுக்காரர் படமுடியாது" என்று றும்கள் வாறகைக்கு வீழப்படுவதற்கு உரிய நிபந்தனைகள் சத்தியமூர்த்தியிடம் வரிசைக்கிரமமாக ஒப்புவிக்கப்பட்டன. அந்தச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/226&oldid=595271" இலிருந்து மீள்விக்கப்பட்டது