பக்கம்:பொன் விலங்கு.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 225

சிறிய அறையை வாடகைக்குப் பேசி முடிப்பதை ஏதோ பெரிய நேச தேச உடன்படிக்கை செய்வது போல செய்ய வேண்டியிருந்தது. நிபந்தனைகளில் கையெழுத்துப் போடுவதற்கு இடம் மட்டும் மீதம் விட்டு முன்னேற்பாடாக ஆங்கிலத்தில் 'டைப்'செய்து வைத்திருந்தார் வீட்டுக்காரர். 'றும்கள் வாறகைக்கு வீழப்படும் நிபந்தனைகளின் கீழே கையெழுத்துப் போட்டு வீட்டுக்காரரிடம் முன்பணம் கொடுத்தான் சத்தியமூர்த்தி,

அவன் அந்த வீட்டுக்காரரின் நிபந்தனைகளை ஒப்புக் கொண்டு முன் பணம் கொடுத்துச் சாவியைக் கையில் வாங்கிக்கொண்டு கல்லூரிக்குத் திரும்பியபோது, காலை எட்டேகால் மணி. மலைப்பகுதியாதலால் இன்னும் வெய்யிலே வரவில்லை. கல்லூரி அறையிலிருந்து பெட்டி சாமான்களை எடுத்துக்கொண்டு போவதற்குத் தயாராக லேக் அவென்யூவிலிருந்து திரும்பும்போதே ஒரு சைக்கிள் ரிக்ஷாவில் திரும்பியிருந்தான் அவன். அங்கே கல்லூரி வாட்ச்மேன் பிளாஸ்கில் காப்பியோடு அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தான்.

"சார், நீங்கபாட்டுக்குச்சொல்லாமல் கொள்ளாமல் புறப்பட்டுப் போயிட்டீங்களே? அந்தம்மா காப்பி கொடுத்தனுப்பியிருக்காங்க. நீங்க குளிச்சுத் தயாரானது தெரிஞ்சப்புறம் என்னைச் சைக்கிளில் புறப்பட்டு வரச்சொல்லியிருக்காங்க. நான் போய் உங்களுக்குடிபன் கொண்டு வரணும்' என்று சொல்லிக்கொண்டே அருகில் வந்த 'வாட்ச்மேனிடம் பெட்டியைக் கொடுத்து வாசலில் நிற்கும் ரிக்ஷாவில் கொண்டுபோய் வைக்கச் சொன்னான் சத்தியமூர்த்தி. "ஏன் சார் வேறே எங்கேயாவது போய்த் தங்கப் போlங்களா?" என்று கேட்டுவிட்டுக் கேள்வியோடும் பெட்டியோடும் தயங்கி நின்றான் வாட்ச்மேன்.

"ஆமாம் லேக் அவென்யூவில் ராயல் பேக்கரி ரொட்டிக் கிடங்கு மாடியில் நல்ல அறையாகக் கிடைத்துவிட்டது. பேசி முன் பணமும் கொடுத்து விட்டேன். அந்தம்மா வந்தாலும் இதைத் தெரிவித்துவிடு" என்று சொல்லிவிட்டுப் பெட்டியை விரைவாக ரிக்ஷாவில் கொண்டுபோய் வைக்குமாறு அவனைத் துரிதப்படுத்தினான் சத்தியமூர்த்தி.

பொ. வி - 15

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/227&oldid=595273" இலிருந்து மீள்விக்கப்பட்டது