பக்கம்:பொன் விலங்கு.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 - பொன் விலங்கு

'மனித வாழ்க்கையிலுள்ள பெரிய ஆச்சரியம் அன்பு நிறைந்தவர்களை எந்த இடத்தில் எப்போது எதற்காகச் சந்திக்கப் போகிறோம் என்பதும், எங்கே எப்போது எதற்காகப் பிரியப் போகிறோம் என்பதும் முன்கூட்டியே தெரியாமலிருப்பதுதான்-"

"அந்த ஆச்சரியம் என் வாழ்வில் நேர்ந்துவிட்டது” என்று தைரியமாக அவன் முகத்தை நிமிர்ந்து பார்த்துச் சொன்னாள் அவள். அந்தத் துணிவையும் உறுதியையும் பார்த்துச் சத்தியமூர்த்தி மலைத்துப் போனான். கல்லூரிக்கு நேரமாகிவிட்டது என்று அவளே அப்போது அவனுக்கு ஞாபகப்படுத்தினாள். அறையைப் பூட்டிக்கொண்டு அவன் கல்லூரிக்குப் புறப்படத் தயாரானான். மறுக்க முடியாத காரணத்தால் அவன் கல்லூரிக் 'காம்பவுண்ட் கேட் வரை அவளோடு அவள் காரிலேயே போய் இறங்கிக் கொள்ள நேர்ந்தது.

k உண்மை பெரிய கோபுரத்தைப் போன்றது. கோபுரத்துக்கு அது கோபுரமாக இருக்கிறது என்பதால்தான் பெருமையே ஒழிய அதன் நிழல் பெரிதாக இருக்கிறது என்பதாலே பெருமையாகி விடாது. உண்மையாக வாழ்வதும் அப்படித்தான்.
k கோடை விடுமுறைக்குப் பின் கல்லூரி திறக்கப்படுகிற முதல் நாளாகையினால் மைதானத்திலும் பச்சைப் பட்டு விரித்தாற் போன்ற புல்வெளிகளிலும், மரங்களின் அடியிலும், விரிவுரைக் கூடங்களின் வராந்தாவிலும், கல்லூரி முதல்வருடைய அறை முன்பும் மாணவர்களின் பெருங்கூட்டம் கூடியிருந்தது. கல்லூரிக் காம்பவுண்டு முழுவதும் புதுமண வீடு போல் மகிழ்ச்சியும் ஆரவாரமும் நிறைந்திருந்தன. பட்டுப் பூத்தது போல் "நெக் டையும் கஞ்சிப் பசை பளபளத்து மின்னும்"பாண்ட்டும் கோட்டுமாக விரிவுரையாளர்களும், பேராசிரியர்களும், குறுக்கும் நெடுக்கும் நடந்து கொண்டிருந்தார்கள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/234&oldid=595289" இலிருந்து மீள்விக்கப்பட்டது