பக்கம்:பொன் விலங்கு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 231

என்று இப்படி எல்லாம் அவன் மனத்தில் நினைவுகள் ஓடின. அப்போது பிளாஸ்க்கைத் திருகி மூடியபடியே அவனைக் கேட்டாள் <g}{@}GIT: -

"இந்த வேலை உங்களுக்கே கிடைத்து நீங்கள் இங்கே வந்துவிட வேண்டுமென்று இராப் பகலாக நான் தவித்த தவிப்பு உங்களுக்குத் தெரியுமா சார்?......."

'நன்றாகத் தெரியும். அதற்காக நீங்கள் மிகவும் சிரமப்பட்டிருக்கிறீர்கள். உங்களுடைய கடிதங்கள் இரண்டும் நீங்கள் தவித்த தவிப்பை எனக்குப் பறைசாற்றியிருக்கின்றன. அத்தனை அழகான வாக்கியங்களால் ஒரு கடிதத்தையும் அதுவும் போதாமல் மற்றொரு கடிதத்தையும் எழுதிய உங்களை எப்படிப் பாராட்டுவதென்றே எனக்குத் தெரியவில்லை, அந்தக் கடிதங்கள் இன்னும் அப்படியே பசுமையாக என் மனதில் பதிந்திருக்கின்றன."

'கடிதங்கள் மட்டும் மனத்தில் பதிந்து விட்டால் போதுமா? அதை எழுதியவளைப்பற்றிய ஞாபகம் கொஞ்சம் கூடப் பதிந்ததாகத் தெரியவில்லையே?...' என்று அவள் கேட்ட கேள்விக்குச் சத்தியமூர்த்தி பதில் சொல்லாமல் இருந்தான். வெளியே வெய்யில் பரவியிருந்ததால் பால்கனிக்கு அப்பால் ஏரி நீர் வெள்ளிக்குழம்பாய் பளபளக்கத் தொடங்கியிருந்தது. மணியும் ஏறக்குறைய பத்தே கால் ஆவதற்கு இருந்தது.

'நீங்கள் நவநீத கவியின் ஞாபக மலர்கள் என்ற புத்தகம் படித்திருக்கிறீர்களா சார்?' என்று இருந்தாற்போலிருந்து ஒரு புதிய கேள்வியை அவனிடம் கேட்டாள் பாரதி."ஏன்? படித்திருக்கிறேன். அதில் என்ன?' என்று சிறிது நேரம் பொறுத்து சத்தியமூர்த்தி அவளுக்குப் பதில் கூறினான்.

'ஒன்றுமில்லை! அதில் ஒரு பாட்டு உண்டு. 'பார்க்கத்தவித்துப் பார்த்ததுவும்... பாராதிருந்து தவித்ததுவும், பேசத் தவித்துப் பேசியதுவும், பேசாதிருந்து தவித்ததுவும் என்று வரும். உங்களைப் பார்த்தநாளிலிருந்தே நானும் அப்படித்தான் இருக்கிறேன். நான் ஏன் இப்படிப் பைத்தியமானேன் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/233&oldid=595287" இலிருந்து மீள்விக்கப்பட்டது