பக்கம்:பொன் விலங்கு.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 233

வெளியூர்களிலிருந்தும், உள்ளூரிலிருந்தும் பிள்ளைகளின் அட்மிஷனுக்குத் தேடிவந்திருக்கிற பெற்றோர்கள் கூட்டமும் ஒருபுறம் காத்திருந்தது. இரட்டைப் பின்னலும், ஒற்றைப் பின்னலும், இன்னும் பலவிதமான தலையலங்காரங்களுமாகப் பல வண்ணப் பட்டுப் பூச்சிகளைப்போல் மாணவிகள் அங்கும் இங்குமாக மான் குட்டிகளாய்த்துள்ளித்திரிந்து கொண்டிருந்தார்கள். பெரிய சித்திரத்தில் முக்கியமான வர்ணங்கள் தீட்டப்பட்டிருக்கிற இடங்கள் மட்டும் பளீரென்று பார்க்கின்றவனுடைய கண்களைத் தேடி வந்து பதிந்து கொள்ளுகிற மாதிரி அவ்வளவு பெரிய காம்பவுண்டில் அத்தனை பெரிய கூட்டத்தில் மாணவிகள் நின்று கொண்டிருக்கிற இடங்கள்'கலீர் கலீ ரென்று பொங்கும் சிரிப்பும், கிண்கிணிப் பேச்சுக்களும், கிளுகிளுக்கும் வளைஒலிகளுமாகத் தனிக் கவர்ச்சியோடு இலங்கின. மஞ்சள் காவி பூசிய கல்லூரிக் கட்டிடங்களுக்குப் பின்னால் nன் கட்டித் தொங்க விட்டாற்போல் மேகக் கொத்துக்கள் பதிந்த மலைச் சிகரங்கள் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக முன்னால் நகர்ந்து வருகின்றனவென அழகாகத் தோன்றின. பொன் உருகி மஞ்சள் வெள்ளமாய்ப் பொங்கினாற்போல் இலைகளே தெரியாதபடி மஞ்சள் நிறத்துக்குப் பூத்துக் கொட்டியிருந்த ஒரு வகை மரங்கள் கல்லூரிக் காம்பவுண்டில் அங்கங்கே நிறைந்திருந்தன. பச்சைப் புல்வெளிக்கும் அதன் மேல் பொன் பூத்தாற்போலப் பொங்கியெழுந்த இந்த மஞ்சள் மலர்த் தருக்களுக்கும் பொருத்தமாக இருந்தன.

கல்லூரி அலுவலகத்தின் படிகளில் ஏறிக்கொண்டிருந்த போது சத்தியமூர்த்தியைப் பலர் சிரத்தையோடு திரும்பிப் பார்த்தார்கள். தூய வெள்ளை உடையும், மலர்ச்சியும் அழகும் மிக்க முகமுமாக மின்னல் நடந்து போவதுபோல் படியேறிப் போகும் இவன் யாரா யிருக்கலாம் என்று அடக்க முடியாத ஆவலோடு திரும்பிப் பார்த்தார்கள் சுற்றியிருந்தவர்கள். கல்லூரி முதல்வரின் அறையும், ஹெட்கிளார்க், ரைட்டர், காஷியர், டைப்பிஸ்ட் முதலியவர்கள் அமர்ந்திருந்த அலுவலக அறையும் தனித்தனியாக இருந்தாலும் உட்புறமிருந்தே ஓர் அறையிலுள்ளவர்கள் மற்றோர் அறைக்குப் போய்வர வசதியாக அமைக்கப்பட்டிருந்தது. சத்தியமூர்த்தி நேராக முதல்வருடைய அறைக்குத்தான் போனான். முதல்வர் யாரோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/235&oldid=595291" இலிருந்து மீள்விக்கப்பட்டது