பக்கம்:பொன் விலங்கு.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 - - பொன் விலங்கு

ஆசிரியர்கள் வகுப்பு நடத்துவதை மறைந்து நின்று கேட்டு அவர்களுடைய தரத்தைத் தீர்மானம் செய்கிற வழக்கம் பூபதியிடம் உண்டு என்று தான் கேள்விப்பட்டிருந்த உண்மை இப்போது நிதர்சனமாகிவிட்டதைசத்தியமூர்த்தி கண்டான். ஆசிரியர்கள் தங்கி ஒய்வு கொள்ளும் அறைக்குள் போய் அவன் நுழைகிறவரை அவனோடு பேசிக் கொண்டே உடன் வந்தார் பூபதி, அறை வாசல் வரை பூபதி அவனோடு கூட வந்ததனால் உள்ளே உட்கார்ந்திருந்த ஆசிரியர்களில் சிலர் அவனை அதிகமாக உறுத்துப் பார்த்தார்கள். ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த பொருளாதார விரிவுரையாளர் மெல்ல எழுந்துவந்து குறும்புத்தனமான தொனியில் சத்திய மூர்த்தியிடம் ஒரு கேள்வி கேட்டார். "நீங்கள் நம்முடைய கல்லூரி நிர்வாகிக்கு மிகவும் வேண்டியவர் போலிருக்கிறதே? நேற்றானால் அந்த விருந்துக் கூட்டம் முடிந்ததும் உங்களைத் தேடி வந்து நீங்கள் செய்த சொற்பொழிவை வானளாவப் புகழ்ந்தார். இன்றோ உங்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டே இந்த அறை வாசல்வரை கொண்டு வந்து விட்டுப் போகிறார். பெரிய யோகக்காரர் ஐயா நீர்! பிடித்தாலும் சரியான புளியங்கொம்பாகத்தான் பிடித்திருக்கிறீர்..." என்று அந்தப் பாமர மனிதர் தன்னை விசாரித்த விதம் சத்தியமூர்த்தியின் மனத்தை மிகவும் புண்படுத்தியது. நாகரிகமாக நினைப்பதற்கும். பேசுவதற்கும் தெரியாதவர்கள் கூடப் படித்துப் பட்டம் பெற்றவர்களாக இருப்பதை எண்ணி வருந்தினான் அவன். பூத்தொடுப்பது போல் முறையான மென்மையோடு மணக்க மணக்க.உரையாடவும் பிறரோடு பழகவும் தெரியாத பலர் பெரிய பட்டங்களுக்கும், பதவிகளுக்கும் சொந்தக்காரர்களாயிருப்பதை அவன் பொது வாழ்வில் அதிகம் பார்த்திருக்கிறான். இன்று இங்கேயும் அதைத்தான் பார்த்தான். பதில் சொல்லாமல் சிரித்து மழுப்பிக் கொண்டிருக்கிற வரை இந்தவிதமான பேச்சுக்கள் வளர்ந்துகொண்டே போகும் என்பதும் அவனுக்குத் தெரியும். ‘'வேண்டியவர் வேண்டாதவர் என்பதை இதை வைத்து எப்படித் தீர்மானம் செய்ய முடியும்? நீங்கள்கூடத்தான் நேற்றும் என்னைத் தேடிவந்து பேசினீர்கள். இன்றும் தேடிவந்து பேசுகிறீர்கள். இப்படி இரண்டு முறை தேடி வந்து பேசி விட்டதனாலேயே நீங்கள் எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/260&oldid=595347" இலிருந்து மீள்விக்கப்பட்டது