பக்கம்:பொன் விலங்கு.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 259

மிகவும் வேண்டியவர் என்று நான் தீர்மானம் செய்துவிட முடியுமா?" என்று குறும்புச் சிரிப்புடனே அவன் அவரைக் கேட்ட கேள்வி, பதில் ஒன்றும் சொல்ல முடியாமல் திணறச் செய்தது. அந்த விநாடியிலிருந்து அவர் சத்தியமூர்த்தியிடம் அநாவசியமாகப் பேசுவதற்குப் பயப்படத் தொடங்கினார். பொருளாதார விரிவுரையாளர் அங்கிருந்து எழுந்து சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் சத்திய மூர்த்திக்கு அருகே அமர்ந்து புத்தகம் படித்துக் கொண்டிருந்த தாவர இயல் விரிவுரையாளர் சுந்தரேசன், 'ஏதோ பேசத் தெரியாமல் பேசிவிட்டார். நீங்கள் அவருக்குப் பதில் சொல்லாமல் சும்மா இருந்திருக்கலாம். வந்ததும் வராததுமாகப் புது இடத்தில் ஒருவரைப் பகைத்துக் கொண்டிருக்க வேண்டாமே?” என்றார். சத்தியமூர்த்தி அதைக் கேட்டுச் சிரித்தான்.

'பொது வாழ்வில் பலவற்றைத் தழுவி உறவு கொள்ள தெரிந்திருப்பது போல் சிலவற்றைப் பகைத்து எதிர்கொள்ளவும் துணிவு வேண்டும் என்று நண்பன் குமரப்பன் அடிக்கடி சொல்லுவான். வேண்டாதவற்றிலிருந்து நம்மை அவ்வப்போது தப்பிக்கச் செய்துகொண்டு விலகித் திருப்திப்படுவதைக் காட்டிலும் வேண்டாதவற்றை நம்மிடமிருந்தே தவிர்த்து விலக்கி விடுவது புத்திசாலித்தனம் சுந்தரேசன் இந்தப் பொருளாதார விரிவுரையாளர் என்னைப்பற்றி என்ன நினைத்துக் கொண்டாலும் எனக்குக் கவலையில்லை. நான் அவருக்குப் பொருத்தமாகச் சொல்ல முடிந்த பதில் எதுவோ அதைத்தான் சொல்லியிருக்கிறேன்."

'இதனால் அவருக்கு உங்கள் மேல் அநாவசியமான வெறுப்பும், கோபமும் உண்டாகலாம்."

'உண்டாகட்டுமே! இன்னொருவருடைய வெறுப்பும், கோபமும் குறுக்கிடாத பகையற்ற வாழ்க்கை எங்கேதான் இருக்கிறது?" என்று சத்தியமூர்த்தி கேட்ட கேள்விக்குச் சுந்தரேசன் மறுமொழி கூறவில்லை! இடைவேளையின்போது சத்தியமூர்த்தி சுந்தரேசனையும் அழைத்துக் கொண்டு கல்லூரி உணவு விடுதிக்கே சாப்பிடப் போயிருந்தான். அங்கேயும் மாணவர்கள் கூட்டம் அவனைச் சூழ்ந்து கொண்டுவிட்டது. ஒவ்வொரு பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் தங்கள் தங்கள் வகுப்புகளுக்கு அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/261&oldid=595349" இலிருந்து மீள்விக்கப்பட்டது