பக்கம்:பொன் விலங்கு.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 275

முத்தழகம்மா மோகினியோட நாட்டியக் கச்சேரி இருந்தால்தான் இந்தக் கலியாணத்துக்கு நான் சம்மதிக்க முடியும்னு மாப்பிள்ளைப் பையனே ஒத்தக் காலில் நிற்கிறானாம் என்று அதையே மாற்றிச் சொல்வார் கண்ணாயிரம். காரியம் ஆவதற்கு எதை வேண்டுமானாலும் செய்யக் கூடியவர் அவர். புகழுக்காகவும் பணத்துக்காகவும் மானத்தையும் இழக்கலாம் என்ற எண்ணமும் செயலும் உடையவர்தான் கண்ணாயிரம். அம்மாவின் மிரட்டலுக்குப் பயந்து கீழே வந்திருப்பவர்களைப் பார்ப்பதற்காகப் படி இறங்கிக் கொண்டிருந்தபோது கோவிலில் கிளிக்கூட்டு மண்டபத்துக்குள் அடைக்கப்பட்டிருந்த அந்தப் பஞ்சவர்ணக் கிளியின் ஞாபகம் வந்தது மோகினிக்கு. அதையும் விடத் தன் நிலைமை இன்னும் மோசம் என்பதை உணர்ந்து பெருமூச்சு விட்டாள் அவள். கீழே இறங்கிக் கூடத்துக்குப் போனதும் அம்மா அங்கு வந்து காத்திருந்தவரை விட்டுக்கொடுக்காமல் தன் தேர்ந்த சாமர்த்தியத்தைப் பயன்படுத்தி சாகலமாகப் பேசினாள்.

'கோயிலுக்குப் போய்விட்டு வந்த பொண்ணு மாடியிலே போய்த் தலைவலின்னு சுருண்டு படுத்திருச்சு, நான் போய்ச் சொன்னேனோ இல்லையோ? அப்படியா? தேடி வந்தவங்களைப் பார்க்காம அனுப்பறது வளமொறையில்லேன்னு தலைவலியோ எழுந்து வந்திருக்கு.?" - -

அம்மாவும் கண்ணாயிரமும் பச்சைப் பொய்களை வந்திருந்த வருக்கு முன்னால் தாராளமாக வாரிவழங்கினார்கள். கேட்கக் கேட்க மோகினி மனம் கொதித்தாள், வயிறெரிந்தாள். தாம் ஏதோ மிகவும் செல்லமாகவும் உரிமையோடும் கூப்பிடப் பாத்தியப்பட்டவரைப் போல் கண்ணாயிரம் அவளுடைய பேரைச் சுருக்கி, "என்ன மோகீ நம்ப.இவர் இருக்காரே...(வந்திருந்த சரிகை அங்கவஸ்திரப் பிரமுகரைச் சுட்டிக்காட்டி) ரொம்பப் பெரிய கலா ரசிகர். பத்து லட்ச ரூபாய் முதலீடு பண்ணி முழுக்க முழுக்க டான்ஸே வருகிறாற்போல் ஒரு கலர் சினிமாப் படம் எடுக்கணும்னு இவாளுக்கு ஒரு நெனைப்பிருக்கு. அப்படி எடுத்தா நீதான் அந்தப் படத்திலே ஹீரோயின்' என்று குழைந்தார். சரிகை அங்கவஸ்திரம் அசடு வழியச் சிரித்துக் கொண்டிருந்தது. மாமிசத்தைக் கொத்திக்கொண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/277&oldid=595383" இலிருந்து மீள்விக்கப்பட்டது